தந்தையுடன் வீடியோகால்., வெடித்து சிதறிய செல்போன்: பாதிப்படைந்த பெண்ணின் கண்கள்!

|

திருவாரூர் மாவட்டத்தில் தந்தையுடன் வீடியோகால் பேசிக் கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறியதில் பெண்ணின் கண்களில் காயம் ஏற்பட்டது.

தந்தையுடன் வீடியோகால் செய்த பெண்

தந்தையுடன் வீடியோகால் செய்த பெண்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி நேற்று காலை செல்போனில் வெளிநாட்டில் உள்ள தனது தந்தையுடன் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டு உள்ளார்.

செல்போன் திடீரென வெடித்து சிதறியது

செல்போன் திடீரென வெடித்து சிதறியது

அப்போது செல்போன் சார்ஜில் போட்டப்படி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சூடான செல்ஃபோன் திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து செல்போனின் உடைந்த பாகங்களின் துகள்கள், ஆர்த்தியின் கண்கள் மற்றும் காதுகளுக்குள் புகுந்தன.

வலி தாங்க முடியாமல் சத்தம்

வலி தாங்க முடியாமல் சத்தம்

இரு கண்களுக்குள்ளும் துகள்கள் புகுந்ததால் ஆர்த்தி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். இதானால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி குடும்பத்தினர், வலியால் துடித்த ஆர்த்தியை உடனடியாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கார் டயர் வெடித்ததற்கு இணையான சத்தம்

கார் டயர் வெடித்ததற்கு இணையான சத்தம்

செல்போனை சார்ஜரில் போட்டு பேசிக்கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நேரிட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கார் டயர் வெடித்ததற்கு இணையாக செல்போன் வெடித்த சத்தம் கேட்டதாக அந்த பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

நாளொன்றுக்கு 20 போன் வெடிப்பதாக தகவல்

நாளொன்றுக்கு 20 போன் வெடிப்பதாக தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது

அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம்

அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம்

இதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20 செல்போன்கள் வெடிப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

 பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது

பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்ன., செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும்

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும்

எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

Tatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா?Tatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா?

குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தவிர்க்கவும்

குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தவிர்க்கவும்

மேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.

Fileimages

Best Mobiles in India

English summary
mobile blast in thiruvarur while talking video call

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X