இதை நீங்க பண்ணாதிங்க., இரவு முழுவதும் செல்போன் சார்ஜ்., வெடித்து சிதறி 3 பேர் பலி!
கரூர் மாவட்டத்தில் செல்போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டு தூங்கியதால், செல்போன் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

தீக்ஷித் மற்றும் ரக்ஷித் என இரண்டு மகன்கள்
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு தீக்ஷித் மற்றும் ரக்ஷித் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

செல்போனை சார்ஜ் போட்டபடி அருகிலேயே தூக்கம்
இரவு தூங்க செல்வதற்கு முன்பு முத்துலட்சுமி தனது செல்போனை சார்ஜ் போட்டபடி அருகிலேயே வைத்து தூங்கியுள்ளார். அவரது மகன்கள் 2 பேரும் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளனர். இரவு முழுவதும் சார்ஜ் ஏறிக் கொண்டு இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறல்
பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய செல்போனில் இருந்து நெருப்பு வேகமாக பரவியதாகவும் இதன்காரணமாக முத்துலட்சுமி இரண்டு மகன்கள் உட்பட 3 பேரும் உடல் கருகி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்து விசாரணை
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ராயனூர் போலீஸார், 3 பேரின் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மின்கசிவு உள்ளிட்ட ஏதேனும் காரணங்கள் உள்ளதா அல்லது செல்போன் வெடித்துதான் இவர்கள் இறந்தார்களா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர்
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

அனைவருக்கும் அச்சம்
இதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல்கள் கூறுகிறது.

பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது
செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்ன., செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்றால் அது செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும்
எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

குறைந்த விலை பேட்டரி
குறைந்த விலை பேட்டரி பொருத்துவரை தவிர்க்கவும் மேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.
fileimages


Click it and Unblock the Notifications