கவனம் தேவை.. முதியவர் காதின் மேல் வெடித்து சிதறிய Mobile.. ஒரு சிறிய பிழையே காரணம்.. எச்சரிக்கும் அதிகாரிகள்..
போனில் பேசிக்கொண்டிருந்த நேரத்திலேயே வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன் (mobile phone blast), கோவையை சேர்ந்த 64 வயது முதியர் கவனிக்காமல் செய்த ஒரு சிறிய தவறே மொபைல் வெடிப்பிற்கு காரணம் (Coimbatore mobile blast) என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன் (smartphone) பயன்படுத்தும் பலர் இந்த தவறை தெரிந்தும், தெரியாமலும் அடிக்கடி செய்து வருகிறார்கள். இதனால், தினசரி பல விபத்துக்கள் (mobile phone accidents) நடந்து வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் செல்போன் (cell phone) பயன்படுத்தும் பொழுது இந்த தவறை ஒரு போதும் செய்யக்கூடாதென்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மொபைல் போன் (mobile) என்ற சாதனம் மனித வாகையில் ஒரு முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. முன்பு ஒரு சிலர் கைகளில் மட்டும் காணப்பட்ட செல்போன் சாதனங்கள், குறுகிய காலத்திற்குள் அணைத்து மக்களின் கைகளிலும் குடிபுகுந்துவிட்டது. இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் (smartphones) இல்லாத நபர்களை பார்ப்பதே மிகவும் அரிதான ஒரு காரியமாக இருக்கிறது. இப்படி மொபைல் போன் மக்களின் தினசரி வாழ்கை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

கவனம் தேவை.. முதியவர் காதின் மேல் வெடித்து சிதறிய Mobile:
மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், பியூச்சர் போன்கள் (Feature phones) மற்றும் சாட்டிலைட் போன் (satellite phone) என்று பல விதமான போன்களை இப்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன் சாதனங்களை பயன்படுத்துவது மிகவும் எளிமையான ஒரு விஷயம் தான் என்றாலும் கூட, சில அடிப்படை விஷயங்களை (basic things) நாம் சரிவர பின்பற்றவில்லை என்றால், அது நம்மை பெரிய ஆபத்தில் சிக்க வைத்துவிடும் என்பதே உண்மையாகும்.
இதை உண்மையாக்கும் விதமாக கோவையில் ஒரு ஸ்மார்ட்போன் வெடிப்பு விபத்து (Coimbatore smartphone exploded accident) நடந்துள்ளது. கோவை, போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 64 வயது கொண்ட ராமச்சந்திரன் என்ற முதியவர், நேற்று தனது மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த வேளையில் அந்த போனில் வெடித்து சிதறியது (phone explodes). இந்த மொபைல் வெடிப்பு விபத்தில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கவனச்சிதறலுடன் செய்த ஒரு சிறிய பிழையே காரணம்.. எச்சரிக்கும் அதிகாரிகள்:
போனில் பேசிக்கொண்டிருந்த வேளையில் சாதனம் வெடித்த நிகழ்வு, ஸ்மார்ட்போன் பயனர்களிடைய புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. ராமச்சந்திரன் அவருடைய ஸ்மார்ட்போனிற்கு வந்த அழைப்பை (voice call) ஏற்று, நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அவர் அழைப்பில் இணைந்து பேசிக்கொண்டிருந்த வேளையில், அவருடைய ஸ்மார்ட்போன் காதின் மேல் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெடிப்பிற்கு முதியவர் செய்த ஒரு சிறிய தவறே காரணம் (simple mistake for mobile blast) என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமச்சந்திரன் சார்ஜிங்கில் இருந்த ஸ்மார்ட்போனை (smartphone on charging) அப்படியே நேரடியாக எடுத்து பேசிருக்கிறார் என்று கூறப்படுகிறது. நீண்ட நேரம் சார்ஜிங்கில் இருந்த போனில், அழைப்பு பேசிய காரணத்தினால், அவருடைய ஸ்மார்ட்போன் ஓவர்ஹீட் ஆகி (over heat), சூடு தாங்காமல் அவர் காதின் மேல் வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்ஜிங்கில் இருக்கும் போனை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது என்ற அடிப்படை புரிதலை பின்பற்றாத காரணத்தினால் இந்த ஸ்மார்ட்போன் வெடி விதைப்பது நிகழ்ந்துள்ளதாக (reason for smartphone blast explosion) கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன் வெடிப்பு நிகழாமல் இருக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
ஸ்மார்ட்போனை பாதுகாப்புடன் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பது இந்த நிகழ்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுமக்கள் இனி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பொழுது, சார்ஜரை கட்டாயம் போனில் இருந்து துண்டித்த பிறகு, அழைப்பு (calling), கேமிங் (gaming), வீடியோ (video watching) பார்ப்பது போன்ற எந்தவிதமான செயல்களையும் செய்யலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சார்ஜிங்கில் இருக்கும் போனை, பயன்படுத்துவது மிகவும் ஆபத்துக்குரியது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications