காஸ்ட்லியாகும் Mobile-கள்.. ரேட் எகுறப்போகிறது.. போன் வாங்குனா இந்த தேதிக்கு முன் வாங்குங்க..
புது ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்க திட்டமிட்டவர்களின் நிலைமை மோசமாக போகிறது. ஆம், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களின் விலை எகுறப்போகிறது (Increase in smartphone price) என்ற தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாதத்தில் இருந்து இந்த விலை அதிகரிப்பு அமலுக்கு வருகிறதென்ற விபரம் இதோ.
கேட்கவே சிலருக்கு நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல இருக்கும். இந்த ஆண்டாவது புது போன் வாங்கலாம் என்று இருந்தேனே, இப்போது என்ன செய்வதென்று சிலர் உடனே ஆழ்ந்த கவலைக்கு சென்றிருப்பீர்கள். உங்கள் எமோஷனை கொஞ்சம் தடுத்து நிறுத்துங்கள். இந்த விலை அதிகரிப்பு அமலுக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் அவகாசம் இருக்கிறது.

விலை அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்: ஆகையால், புது மொபைல் அல்லது ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் உடனே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள நாளுக்கு முன் வாங்கிக் கொண்டால் சிறப்பாக அமையும். அதேபோல், நீங்கள் அதிக பணம் கொடுத்து புது ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க வேண்டிய அவசியமில்லை. சரி, நேரம் வீணடிக்காமல் உடனே பதிவிற்குள் செல்லலாம்.
சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன் சாதனம் மற்றும் மொபைல் சாதனங்களின் விலை 15% முதல் 20% வரை அதிகரிக்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கு DRAM (மெமரி சிப்) விலைகளில் ஏற்றம் இருப்பது தான் காரணம் என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன காரணம்? குறைந்தது இரண்டு முக்கிய சப்ளையர்களான சாம்சங் (Samsung) மற்றும் மைக்ரான் (Micron) ஆகிய நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் விலையை 15-20% அதிகரிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் மற்றும் பிசி (PC) சந்தைகளில் படிப்படியான மீட்சியுடன் இணைந்து, AI சேவையின் விரைவான முன்னேற்றத்தால் ஏற்படும் விநியோக தடைகள் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் தாக்கம் அடுத்த காலாண்டிலிருந்து உணரப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது மார்ச் காலாண்டில் தயாரிப்புகளை வழங்க தேவையான உபகரணங்களை கைவசம் வைத்துள்ளன. ஆகையால், இப்போது உடனே விலை அதிகரிப்பை அமல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், பிப்ரவரி பிற்பகுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் மெமரி சிப்களின் விலை சுமார் 10-15% வரை உயரக்கூடும் என்று ET அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால் சமீபத்திய வரி குறைப்புக்கள் இந்தியாவில் விலைவாசி உயர்வின் தாக்கத்தை ரத்து செய்ய உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், பேட்டரி கவர்கள், மெயின் லென்ஸ், பேக் பேனல் கவர்கள், ஆண்டெனா, சிம் சாக்கெட்டுகள் மற்றும் இதர இயந்திர பொருட்கள் உள்ளிட்ட மொபைல் போன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு எச்சரிக்கும் தகவல்: இதை மக்கள் மீது கண்கூடாக திணிப்பதற்கு பதிலாக, நிறுவனம் சூட்சமமாக செயல்பட வாய்ப்புள்ளது என்று சில அறிக்கை தகவல்கள் எச்சரிக்கின்றன. காரணம், பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் குறைந்த ஸ்டோரேஜ் உடன் சில டவுன் டோன்களை தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதை நிறுவனங்கள் மறைமுகமாக செய்ய வாய்ப்புள்ளது என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
மெமரி சிப்கள் மற்றும் விலை அதிகரிப்பு இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தை மெதுவாக ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், புது போன் வாங்க திட்டமிடுபவர்கள் ஜூன் மாதத்திற்கு முன்பே புதிய சாதனங்களை வாங்கினால் லாபமானது.


Click it and Unblock the Notifications








