14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை! பெற்றோர்கள் கட்டாயம் படிங்க!

|

ஆன்லைன் கேமிங் விளையாட்டைத் தொடர்ச்சியாக விளையாடி வந்ததற்கு, குடும்ப உறுப்பினர்கள் திட்டியதற்காக 14 வயது சிறுவன், தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது சிறுவன்

14 வயது சிறுவன்

விசாகப்பட்டினத்தில் உள்ள பேடா கொடாரா என்ற பகுதியில் வசிக்கும் பெற்றோரின் மகனான பி.ரோஹித் என்ற 14 வயது சிறுவன், பப்ஜி கேமை தொடர்ச்சியாக விளையாடிய காரணத்தினால் குடும்பத்தினர் திட்டியுள்ளனர். மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதற்காகக் கண்டித்தும் உள்ளனர்.

பஜ்ஜி கேமிற்கு அடிமை

பஜ்ஜி கேமிற்கு அடிமை

இச்சிறுவன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் பஜ்ஜி கேமை இடைவெளியின்றி விளையாட்டு வந்துள்ளான். சிறுவனின் நடவடிக்கையைக் கவனித்து வந்த பெற்றோர், கண்டிப்பிற்கு பின் மீண்டும் மொபைல் கேமை விளையாடியதும், இம்முறை சற்று கூடுதல் கண்டிப்புடன் கண்டித்துள்ளானார்.

பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.!பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.!

விஷம் அருந்திய சிறுவன்

விஷம் அருந்திய சிறுவன்

பெற்றோரின் கண்டிப்பைத் தாங்கமுடியாமல் மனமுடைந்த சிறுவன், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். மகன் விஷம் அருந்திய செய்தி கேட்டுப் பெற்றோர்கள் பதறி அடித்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுவன் மருத்துவ பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது, மனமுடைந்து தன் மகன் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசாரிடம் பெற்றோர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா?வேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா?

மொபைல் அடிக்சன்

மொபைல் அடிக்சன்

மொபைல் அடிக்சனிற்கு உங்கள் குழந்தைகளும் அடிமையாகி உள்ளனரா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்படி அவர்களும் அதிக நேரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக ஃபோனே கதி என்று இருந்தால் உடனே உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த டிப்ஸை ஃபோலோ பண்ணுங்கள்.

டிப்ஸ்

டிப்ஸ்

  • உங்கள் குழந்தைகளை வேறு அறிவு சார்ந்த வேளைகளில் அல்லது ஸ்போர்ட்ஸ் இல் முழுமையாக ஈடுபட்ட செய்யுங்கள்.
  • ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்.
  • கால அவகாசம் கொடுத்துப் பயன்படுத்த அனுமதியுங்கள்.
  • எப்பொழுதும் அவர்கள் கேம் விளையாடினாள் நேரம் முடிந்தது என்பதைக் கூறி 5 நிமிடத்திற்கு முன்பு எச்சரிக்கை செய்யுங்கள்.
  • பேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.!பேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.!

    அன்பாக சொல்லுங்கள்

    அன்பாக சொல்லுங்கள்

    • ஸ்மார்ட்போன் அபாயம் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள்.
    • ஸ்மார்ட்போனில் பாஸ்வோர்டு போடுங்கள்.
    • பெற்றோர்களும் நல்ல முன்மாதிரியாக இருக்கப் பாருங்கள். குழந்தைகள் முன்னாள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
    • நீண்ட தூரப் பயணத்தின் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Mobile Addiction: 14-Year-Old Boy Commits Suicide Parents Must Read : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X