1 கிலோ மாம்பழம் 2.70 லட்சமா? உலகளவில் டிரெண்டிங்கான இந்த மாம்பழத்தில் அப்படி என்ன ருசி இருக்கு?

|

உலகத்தில் நடக்கும் பல விசித்திரமான நிகழ்வுகளும், புதிய தகவல்களும் இணையத்தில் தினம் - தினம் வைரல் ஆகி வருகிறது. தினம் தினம் இணையத்தில் நிகழும் டிரெண்டிங்கான விஷயங்களை அறிந்துகொள்வதில் நம் மக்களுக்கு இருக்கும் ஆர்வமே தனி, அப்படி, உலகளவில் உள்ள மக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய ஒரு அட்டகாசமான தகவலைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். உலகத்தின் மிகவும் பிரசித்திபெற்ற மாம்பழத்தைப் பற்றிய தகவல்கள் தான் இன்றைய உலக டிரெண்டிங் டாபிக்.

சாதாரணமா ஒரு கிலோ மாம்பழம் என்ன விலை சார் இருக்கும்? நீங்களே சொல்லுங்க

சாதாரணமா ஒரு கிலோ மாம்பழம் என்ன விலை சார் இருக்கும்? நீங்களே சொல்லுங்க

சரி, விஷயத்திற்கு வருவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வியை நாங்கள் கேட்க வேண்டும், ஒரு கிலோ மாம்பழம் என்ன விலை இருக்கும் சார்? இந்த மாம்பழ சீசனில் ஒரு முறையாவது மாம்பழம் வாங்கி சுவைத்தவர்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். நம்முடைய ஊரில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.80 முதல் ரூ.250 வரை செல்கிறது. அதிலும், ஸ்பெஷல் மாம்பழங்களின் விலை இன்னும் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், உலகத்தின் மிகவும் ருசியான மாம்பழத்தின் விலை கிலோவிற்கு சுமார் ரூ.2.70 லட்சம் தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

மாம்பழங்களின் தேசமா இந்தியா?

மாம்பழங்களின் தேசமா இந்தியா?

நம்புங்கள் மக்களே! அது தான் உண்மையும் கூட, என்னதான் நமது இந்தியா மாம்பழங்களின் தேசம் என்று அழைக்கப்பட்டாலும், விலை உயர்ந்த மாம்பழத்தை விற்பனை செய்யும் நாடக ஜப்பான் மட்டுமே திகழ்கிறது. பழங்களின் ராஜா என்றும் அழைக்கப்படும் மாம்பழம், இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாம்பழ உற்பத்தியில் 23.47% பங்கு மற்றும் அதிக உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

இந்தியாவில் கிடைக்கும் மாம்பழங்கள் வெரைட்டி

இந்தியாவில் கிடைக்கும் மாம்பழங்கள் வெரைட்டி

இந்தியாவில் பைங்கன்பள்ளி, ஹிம்சாகர், துசேரி, அல்போன்சா, லாங்டா, மால்டா மற்றும் பல வகை மாம்பழங்கள் பயிரிடப்படுகிறது. உலகிற்கு புதிய மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் இந்தியா உள்ளது. ஆனால், உலகளவில் மியாசாகி மாம்பழத்திற்கு இருக்கும் மவுஸே தனி தான். மியாசாகி மாம்பழங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மாம்பழ வகைகளிலேயே உலகளவில் மிகவும் விலை உயர்ந்த மாம்பழ வகையாக இந்த மாம்பழம் திகழ்கிறது. இந்த மாம்பழங்கள், நமக்கு தெரிந்த மஞ்சள் நிறத்தில் இல்லாமல் ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது.

ஊதா நிற மாம்பழத்திற்கு உலகளவில் அதிக மவுஸா?

ஊதா நிற மாம்பழத்திற்கு உலகளவில் அதிக மவுஸா?

ஊதா நிற மாம்பழம் அல்லது மியாசாகி மாம்பழம் என்று அழைக்கப்படும் இந்த மாம்பழ வகை ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படுகிறது. உலகின் விலை உயர்ந்த மாம்பழமாகக் கருதப்படும் இந்த மாம்பழங்கள் இந்த நாட்களில் இந்தியாவிலும் பயிரிடப்படுகிறது என்பது வியக்கத்தக்கது. குறிப்பாக இந்தியாவின் பங்களாதேஷில் இவை பயிரிடப்படுகிறது. இது சில காலமாகத் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸிலும் காணப்படுகிறது. எங்குப் பயிரிடப்பட்டாலும் இதன் பூர்விகம் என்னவோ ஜப்பானிற்குச் சொந்தமானது தான்.

கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்புகிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு

இந்தியாவில் நாய்களின் பாதுகாப்புடன் இந்த மாம்பழங்கள் வளர்க்கப்படுகிறதா?

இந்தியாவில் நாய்களின் பாதுகாப்புடன் இந்த மாம்பழங்கள் வளர்க்கப்படுகிறதா?

மியாசாகி மாம்பழங்கள் முக்கியமாக ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் வளர்க்கப்படுகின்றன. இந்த மியாசாகி நகரம் வெப்பமான வானிலை, நீண்ட சூரிய ஒளி மற்றும் ஏராளமான மழைப்பொழிவு ஆகியவற்றுடன் உற்பத்திக்குச் சாதகமான காலநிலையைக் கொண்டுள்ளதால், இங்கு இந்த மாம்பழங்கள் அமோகமாக வளர்கின்றன. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் இரண்டு வகையான மாம்பழங்கள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், அவை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நாய்களால் 24 மணி நேரமும் பாதுகாக்கப்படுவதாகவும் சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மியாசாகி மாம்பழம் என்றால் என்ன?

மியாசாகி மாம்பழம் என்றால் என்ன?

இந்த வகை மாம்பழத்தைப் பயிரிட, நாம் முன்பே சொன்னது போல், வெப்பமான வானிலை மற்றும் நீண்ட நேரம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. இந்த மாம்பழங்கள் சுமார் 350 கிராம் எடையுள்ள மாம்பழங்களாக அறுவடை செய்யப்படுகிறது. இவற்றின் வடிவம் மற்றும் எரியும் சிவப்பு நிறத்தின் காரணமாக இந்த மாம்பழங்கள் எஃக்ஸ் ஆப் சன்ஷைன் (Eggs of Sunshine) என்று அழைக்கப்படுகின்றன. மியாசாகி மாம்பழங்கள் அதன் பிறப்பிடமான ஜப்பானின் மியாசாகியில் தையோ-நோ-டோமாகோ (Taiyo-no-Tomago) என்றும் அழைக்கப்படுகிறது.

ஓ.. செவ்வாயில் இருந்து பார்த்தா நம்ம பூமியும் நிலவும் இப்படி தான் இருக்குமா? நாசா வெளியிட்ட படம்..ஓ.. செவ்வாயில் இருந்து பார்த்தா நம்ம பூமியும் நிலவும் இப்படி தான் இருக்குமா? நாசா வெளியிட்ட படம்..

ஏன் மியாசாகி மாம்பழங்கள் மட்டும் இவ்வளவு விலை அதிகமாக இருக்கிறது?

ஏன் மியாசாகி மாம்பழங்கள் மட்டும் இவ்வளவு விலை அதிகமாக இருக்கிறது?

இந்த மாம்பழங்கள் பழுக்கும்போது ஊதா நிறத்தில் இருந்து எரியும் சிவப்பு நிறமாக மாறும். இதன் வடிவம் டைனோசரின் முட்டைகள் போல் இருக்கும். உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம் ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் உமிழும் சிவப்பு நிறத்தின் காரணமாக, மியாசாகி மாம்பழங்கள் டிராகன் முட்டை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மாம்பழங்களில் 15% அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரை உள்ளத்தால், இதன் ருசிக்கு ஈடு இணையே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், இதன் விலை லட்சத்திற்கு எகிறுகிறது.

Best Mobiles in India

English summary
Miyazaki Mangoes Goes Viral On Internet All Details About Worlds Most Expensive Mango : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X