வெறும் ரூ.799 பட்ஜெட்.. 50 மணி நேர பேட்டரி பேக்கப்.. அல்ட்ரா-லோவ் லேட்டன்சி மோட்.. எந்த மாடல்?
மிவி (Mivi) நிறுவனத்தின் மிவி டுயோபாட்ஸ் டி 3 (Mivi DuoPods D3) இயர்பட்ஸ் வெறும் ரூ.799 பட்ஜெட்டில் 50 மணி நேரம் பேட்டரி பேக்கப், ஏஐ இஎன்சி சிப், 380mAh பேட்டரி என்று மிகவும் தரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம், வயர்டு இயர்போன் காலம் மலையேறி போய்விட்டது. எங்கு பார்த்தாலும், ப்ளூடூத் இயர்போன் (Bluetooth Earphones) மற்றும் இயர்பட்ஸ் (Earbuds) பயன்பாட்டை காண முடிகிறது. இதனால், இயர்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதுப்புது அம்சங்களுடன் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால், ப்ளூடூத் இயர்பட்ஸ்களில் சில பின்னடைவுகள் இருக்கின்றன.

அதாவது, வயர்டு இயர்போன்களை பயன்படுத்தி நீங்கள் மொபைலில் வீடியோ பார்த்தால், ஆடியோ மற்றும் வீடியோவுக்கான சிங்க் கச்சிதமாக இருக்கும். எந்த வித தாமதமும் இருக்காது. ஆனால், ப்ளூடூத் இயர்பட்ஸ்களில் ஆடியோ, வீடியோ சிங்க் கச்சிதமாக இருக்காது. சில இயர்பட்ஸ்களில் வீடியோ பார்க்கும்போது, வீடியோ விரைவாகவும், ஆடியோ மெதுவாகவும் இருப்பதை நீங்கள் கூட கவனித்திருக்கலாம்.
இதனை தவிக்க இயர்பட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், லோவ் லேட்டன்சி (Low latency) டெக்னாலஜியை பயன்படுத்துகின்றன. இதன் மூலம் ஆடியோ, வீடியோ சிங்க் கனகச்சிதமாக இருப்பதை உறுதி செய்கின்றன. இந்த டெக்னாலஜி கொண்ட இயர்பட்ஸ்கள் குறைந்தது, ரூ.2,000 க்கும் மேல் விலை கொண்டிருக்கும். ஆனால், மிவி நிறுவனத்தின் மிவி டுயோபாட்ஸ் டி3 இயர்பட்ஸ் ரூ.1000 பட்ஜெட்டை விட குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதோடு, தொடர்ந்து 50 மணி நேர பேட்டரி பேக்கப்பை கொடுக்கிறது. மேலும், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் எப்போது விற்பனைக்கு வருகிறது? எந்த தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது? அறிமுக சலுகை எவ்வளவு உள்ளிட்ட முழு விவரங்கள் பின்வருமாறு.
மிவி டுயோபாட்ஸ் டி3 அம்சங்கள் (Mivi DuoPods D3 Specifications): இந்த மிவி டுயோபாட்ஸ் 13 மிமீ டிரைவர்கள் கொண்டுள்ளது. ஏஐ இஎன்சி சிப் (AI-ENC Chip) உடன் டூயல் மைக் வருகிறது. அதோடு ஏஐ என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) வருகிறது.
5எம்எஸ் அல்ட்ரா-லோவ் லேட்டன்சி கேமிங் மோட் (Ultra-Low Latency Gaming Mode) கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் வெர்ஷன் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) கோடெக் சப்போர்ட் வருகிறது. இந்த மிவி டுயோபாட்ஸின் கேஸில் 380mAh பேட்டரியும், இயர்பட்ஸ்களில் தலா 40mAh பேட்டரியும் வருகிறது.
இந்த பேட்டரி தொடர்ந்து 50 மணி நேரம் பேக்கப் கொடுக்கக் கூடியது. இந்த பேட்டரி சார்ஜ் செய்ய ஸ்விஃப்ட் சார்ஜ் டெக்னாலஜி (Swift Charge Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 நிமிடங்களுக்கு பிளே டைம் கிடைக்கும். அதோடு IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இதுவொரு மேட் இன் இந்தியா கம்பெனி இயர்பட்ஸாகும். மேலும், 1 வருட வாரண்ட்டி வழங்கப்படுகிறது.
இந்த மிவி டுயோபாட்ஸ் டி3, ஆர்டிக் ப்ளூ (Artic Blue), கோபால்ட் பிளாக் (Cobalt Black), ஹாசல் கிரீன் (Hazel Green), லைம் வைட் (Lime White) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. மிவி தளத்திலும், பிளிப்கார்ட்டிலும் (Flipkart) விற்பனைக்கு கிடைக்கிறது.
நாளை (ஆகஸ்ட் 3) நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மிவி டுயோபாட்ஸ் டி3 இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ.799க்கு விற்பனைக்கு வருகிறது. மலிவான பட்ஜெட்டில் அதிக பேட்டரி பேக்கப் கிடைக்கும் இயர்பட்ஸ் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இது நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








