Home
News

கேட்டாலே Vibe ஆக்கும்.. சூப்பர் BASS டெக்னாலஜி.. 50 ஹவர் பிளேபேக்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. வெறும் ரூ.999 மட்டும்!

வெறும் ரூ.999 பட்ஜெட்டில் பேஸ் சவுண்ட்டிங் அனுபவத்தில் பிச்சியெடுக்கும் சூப்பர் சாலிட் பேஸ் டிரைவர்கள் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி கொண்ட மிவி டுயோபாட்ஸ் ஏ250 (Mivi DuoPods A250) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸின் முழு அம்சங்கள், விற்பனை விவரங்கள் இதோ.

நம்மில் பலரும் இயர்போன், ஹெட்போன், நெக்பேண்ட், இயர்பட்ஸ் போன்றவற்றை ஆசைப்பட்டு வாங்குவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். அதாவது, சிறந்த மியூசிக் அனுபவத்துக்காகவும், ஆடியோ, வீடியோ காலிங் சப்போர்ட்டுக்காகவும் மட்டுமே அவற்றை வாங்குகிறோம். இந்த இரண்டையும் அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றக்கூடிய வகையில், புதுப்புது டெக்னாலஜிகள் அவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

மியூசிக் அனுபவத்துக்கு சூப்பர் சாலிட் பேஸ், ட்ரூ சிங், லோவ் லேட்டன்சி போன்ற டெக்னாலஜிகளும், காலிங் அனுபவத்துக்கு இஎன்சி (ENC), ஏஎன்சி (ANC) போன்ற டெக்னாலஜிகளும் வந்துவிட்டன. இப்போது, மக்களிடையே பெரும்பாலும் இயர்பட்ஸ்களே பயன்படுத்தப்படுவதால், அதில் இந்த டெக்னாலஜிகள் அதிகம் இடம்பெறுகின்றன.

ஆனால், இந்த டெக்னாலஜி கொண்ட இயர்பட்ஸ்களின் விலை ரூ.2,000க்கும் மேல் இருக்கும். ஆனால், இந்தியாவின் மிவி (Mivi) நிறுவனம், வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் அந்த டெக்னாலஜிகள் கொண்ட இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், சூப்பர் சாலிட் பேஸ் டிரைவர்கள், ஏஐ - இஎன்சி சிப் கொண்ட மிவி டுயோபாட்ஸ் ஏ250 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிவி டுயோபாட்ஸ் ஏ250 அம்சங்கள் (Mivi DuoPods A250 Specifications): இந்த இயர்பட்ஸ் 13 மிமீ சூப்பர் சாலிட் பேஸ் டிரைவர்கள் (Super Solid Bass Drivers) கொண்டுள்ளது. இவற்றில் 20Hz - 20KHz டிரைவர் பிரிகொன்சி ரெஸ்பான்ஸ் (Driver Frequency Response) கிடைக்கும்.

சூப்பர் BASS டெக்னாலஜி.. 50 ஹவர் பிளேபேக்.. வெறும் ரூ.999 மட்டும்!

கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபவத்துக்காக ஏஐ - இஎன்சி (AI-ENC) சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) ஆடியோ கோடெக்ஸ் சப்போர்ட் (Audio Codecs Support) வருகிறது. நாய்ஸ் கேன்சல் காலிங் அனுபவத்துக்காக எச்டி கால்ஸ் (HDCalls) என்னும் பிரத்யேக டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மிவி இயர்பட்ஸில் டூயல் கனெக்சன் (Dual connection) சப்போர்ட் வருகிறது. ப்ளூடூத் வெர்ஷன் 5.3 கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 மீட்டர்கள் வரையில் ஆப்ரேடிங் ரேஞ்ச் (Operating Range) கிடைக்கும். இந்த இயர்பட்ஸ் கேஸில் 500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல 2 இயர்பட்களிலும் தலா 40mAh பேட்டரி வருகிறது. இதனை ஃபுல் சார்ஜ் செய்ய 1 மணி நேரம் மட்டுமே போதும், அதன்பின் தொடர்ந்து 50 மணி நேரம் பிளேபேக் டைம் கிடைக்கும். இதில் ஸ்விப்ட் சார்ஜ் டெக்னாலஜி (Swift Charge Technology) கொடுக்கப்பட்டிருப்பதால், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 500 நிமிடங்களுக்கு பிளேடைம் கிடைக்கும்.

மேலும், டூயல் மைக் (Dual Mic), IPX4 தர ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த இயர்பட்ஸை ஆர்டர் செய்தால், இயர்பட்ஸ் மற்றும் கேஸ், டைப் - சி சார்ஜிங் கேபிள், 1 வருடத்துக்கான வாரண்ட்டி கார்டு, யூசர் கைடு ஆகியவை பேக்கிங்கில் கொடுக்கப்படும்.

இந்த மிவி டூயோபாட்ஸ் ஏ250 ப்ளூ (Blue), பிளாக் (Black), ஸ்பேஸ் கிரே (Space Grey), வைட் (White) மற்றும் மின்ட் க்ரீன் (Mint Green) ஆகிய 5 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை மட்டுமே என்பதால், விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, விரைவில் வாங்கிக் கொள்வது லாபம் தரக்கூடியதாக இருக்கும். இந்த மிவி இயர்பட்ஸ் மிவி.இன் (Mivi.in) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுவொரு மேட் இன் இந்தியா தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற புதுப்புது இயர்பட்ஸ் அவற்றில் பயன்படுத்தப்படும் டெக்னாலஜி தொடர்பாக அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mivi DuoPods A250 With 40h Playback, Fast Charge Under Rs 1000 Earbuds Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X