Home
News

இவ்ளோ தானா? ரூ.999 க்கு RGB லைட்னிங்.. டச் கன்ட்ரோல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50 ஹவர்ஸ் பேக்கப்.. எந்த மாடல்?

வெறும் ரூ.1,000 பட்ஜெட்டுக்குள் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 மணி நேர பேட்டரி பேக்கப், நாய்ஸ் கேன்சலேஷன், டச் கன்ட்ரோல் போன்ற நல்ல நல்ல அம்சங்களுடன் மிவி கமாண்டோ இசட்7 (Mivi Commando Z7) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்கள் இதோ.

இப்போதெல்லாம், இயர்பட்ஸ் இல்லாத காதுகளை விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்கு நம்மிடையே அவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நடந்து செல்வது முதல் பேருந்து, பைக் அல்லது காரில் செல்வது வரையில் வெளியே செல்லும் போது ஒரு அரைமணி நேரம் கிடைத்தால் போதும் இயர்பட்ஸ்களில் மியூசிக் கேட்க தொடங்கிவிடுகின்றனர்.

ரூ.999க்கு லைட்னிங்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. எந்த பட்ஸ்?

இதனால் நாளுக்கு நாள் அவற்றின் தயாரிப்பும், அதுதொடர்பான டெக்னாலஜிகளும் பெருகி வருகின்றன. அந்த வரிசையில், கேமிங் மோட், ஃபாஸ்ட் சார்ஜிங், நீண்ட நேர பேட்டரி பேக்கப், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற டெக்னாலஜிகள் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இவை அனைத்தும் கொண்ட இயர்பட்ஸ்கள் குறைந்தது ரூ.2,500க்கும் மேல் விலை கொண்டிருக்கும்.

ஆனால், மார்கெட்டில் நிலவி வரும் போட்டி காரணமாக சில நிறுவனங்கள் அவற்றை கம்மி விலை இயர்பட்ஸ்களிலேயே கொடுத்து வருகின்றன. அப்படி பெரும்பாலான டெக்னாலஜி மற்றும் அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட மிவி கமாண்டோ இசட்7 (Mivi Commando Z7) இயர்பட்ஸ் நம்ப முடியாத பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

மிவி கமாண்டோ இசட்7 அம்சங்கள் (Mivi Commando Z7 Specifications): இந்த இயர்பட்ஸ் 13 மிமீ எலக்ட்ரோ டைனாமிக் டிரைவர்கள் ( Electro-Dynamic Drivers) கொண்டுள்ளது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் காலிங் அனுபவத்துக்காக, ஏஐ-இஎன்சி சிப் (AI-ENC Chip) சப்போர்ட் கொண்ட டூயல் மைக் (Dual Mic) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஏஐ என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) மற்றும் எச்டிகால்ஸ் டெக்னாலஜி (HDCalls Technology) சப்போட்டுடன் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல கேமிங் பிரியர்களை கவரும் நோக்குடன் 35ms லோவ் லேட்டன்சி கேமிங் மோட்ஸ் (Latency Gaming Modes) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் ஆடியோ - வீடியோ சிங்க் (Audio Video Sync) துல்லியமான அவுட்புட் கொடுக்கும்.

இந்த மிவி இயர்பட்ஸ் டூயல் ஆர்ஜிபி லைட்னிங் (Dual RGB lighting) டிசைன் கொண்டுள்ளது. ப்ளூடூத் வி.5,3 (Bluetooth V.5.3) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த கனெக்டிவிட்டி 10 மீட்டர்கள் வரையில் ரேஞ்ச் கொடுக்கக் கூடியது. இதில் டச் கன்ட்ரோல் (Touch Controls) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிளே/பாஸ் (Play/Pause), வால்யூம் கன்ட்ரோல் (Volume Control) மற்றும் கேமிங் மோட் ஆன்/ஆப் (Gaming Mode On/Off) உள்ளிட்டவற்றை செய்து கொள்ள முடியும். இந்த மிவி கமாண்டோ இசட்7 இயர்பட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fact Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து 500 நிமிடங்களுக்கு பிளே பேக் டைம் கொடுக்கக்கூடியது.

அதேபோல ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 50 மணி நேரத்துக்கு பிளே டைம் கொடுக்கும். இதற்காக ஸ்விப்ட் சார்ஜ் டெக்னாலஜி (Swift Charge Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) வருகிறது. இதுவொரு மேட் இன் இந்தியா (Made in India) தயாரிப்பாகும். இதற்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

இந்த மிவி கமாண்டோ இசட்7 இயர்படஸ் ஒயட் (White), பிளாக் (Black) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த இயர்பட்ஸ் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த இயர்பட்ஸின் விலை வெறும் ரூ.999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mivi Commando Z7 Gaming Earbuds With Touch Controls Fast Charge Sale on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X