தீபாவளிக்கு கம்மி விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் வாங்க!
சியோமி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சியோமி நிறுவனம் இன்று 12 மணி முதல் தனது புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் விற்பனையைச் சலுகையுடன் பிளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mi.com தளத்திலும் துவங்கியுள்ளது.

புதிய ஸ்மார்ட் டிவி விற்பனை
இந்த விற்பனை காலத்தில், சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களான சியோமி மி டிவி 4X (65' இன்ச்) மாடல், சியோமி மி டிவி 4X (50' இன்ச்) மாடல், சியோமி மி டிவி 4X (43' இன்ச்) மாடல், சியோமி மி டிவி 4A (40' இன்ச்) மாடல்களை விற்பனைக்கு அறிவித்துள்ளது.

சியோமி மி டிவி மாடல்கள்
சியோமி நிறுவனத்தின் அறிவிப்பின் படி சியோமி மி டிவி 4X 65' இன்ச், சியோமி மி டிவி 4X 43' இன்ச் மற்றும் சியோமி மி டிவி 4A 40' இன்ச் ஆகிய மூன்று மாடல்களும் http://mi.com மற்றும் Flipkart தளத்தில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சியோமி மி டிவி 4X 50' இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி http://mi.com தளத்தில் மட்டுமே கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை விப்ராங்கள்
தீவாளி பண்டிகையை முன்னிட்டு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, சியோமி நிறுவனத்தின் இந்த தீபாவளி சேல்ஸ் விற்பனை ஒரு நல்ல சாய்ஸ் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை விப்ராங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விலை பட்டியல்
சியோமி மி டிவி 4X 65' இன்ச் மாடலின் விலை ரூ. 54999
சியோமி மி டிவி 4X 50' இன்ச் மாடலின் விலை ரூ. 29999
சியோமி மி டிவி 4X 43' இன்ச் மாடலின் விலை ரூ. 24999
சியோமி மி டிவி 4A 40' இன்ச் மாடலின் விலை ரூ. 17999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications