வல்லவனுக்கு வல்லவன்: டிக்டாக்கை ஓரங்கட்டும் இந்திய செயலி மிட்ரான்., 50 லட்சத்தைக் கடக்கும் டவுன்லோட்

|

மிட்ரான் என்ற புதிய செயலி டிக்டாக்கிற்கு எதிராக உருவெடுத்து வருகிறது. சுமார் ஒரு மாத இடைவெளியில் மிட்ரான் பதிவிறக்கம் 50 லட்சத்தை கடந்துள்ளது. இந்த செயலி 4.7 மதிப்பீடு பெற்றுள்ளது.

டிக்டாக்கில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

டிக்டாக்கில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

இந்தியாவில் பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என சிலர் விபரீத முடிவுகளை எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது., அந்த அளவிற்கு டிக்டாக்கின் ரசிகர்களாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

மிட்ரான் என்ற புதிய இந்திய செயலி

மிட்ரான் என்ற புதிய இந்திய செயலி

இந்த நிலையில் மிட்ரான் என்ற புதிய இந்திய செயலி டிக்டாக் போட்டியாளராக உருவெடுத்துள்ளது. குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்து செயலியில் மிட்ரான் இடம்பெற்றுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட இந்த செயலியானது 50 லட்சம் பதிவிறக்கங்களை கடந்துள்ளது.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

இந்தியாவில் கடும் விமர்சனங்கள்

இந்தியாவில் கடும் விமர்சனங்கள்

டிக்டாக் செயலி மீது இந்தியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதேபோல் கொரோனா தொற்று காரணமாக சீனாவின் பொருட்கள் மற்றும் உற்பத்தி மீது அதிர்ப்தி நிலை ஏற்பட்டு வருகிறது. டிக்டாக் எதிராக களமிறங்கிய மிட்ரானுக்கு அதிக மதிப்பீடுகள் பெற்று வருகிறது.

மிட்ரான் உருவாக்கம்

மிட்ரான் உருவாக்கம்

இந்த செயலியானது ஐஐடி ரூர்க்கி மாணவர் சிவங்க் அகர்வால் மிட்ரான் பயன்பாட்டை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயன்பாடானது டிக்டாக்கின் குளோன் போலவே தெரிகிறது.

இலவசமாக அணுக கிடைக்கும் சிறந்த செயலிகள்

இலவசமாக அணுக கிடைக்கும் சிறந்த செயலிகள்

கூகுள் ப்ளே தரவரிசைப்படி இலவசமாக அணுக கிடைக்கும் சிறந்த செயலிகள் பட்டியலில் மிட்ரான் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஆரோக்ய சேது ஆப், இரண்டாவது இடத்தில் டிக்டாக் உள்ளது, அதே நேரத்தில் ஏழாவது இடத்தில் மிட்ரான் செயலி உள்ளது. அதேபோல் இந்த தரவரிசையில் இன்ஸ்டாகிராம், ஹலோ மற்றும் பேஸ்புக் போன்றவைகளும் கிடைக்கிறது.

4.7 மதிப்பீடு

4.7 மதிப்பீடு

இந்த செயலியானது 4.7 மதிப்பீடு பெற்றுள்ளது. அதேபோல் இதில் வெளிப்படையாக குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எடிட்டிங் போன்ற அம்சங்கள் ஆதரிக்கப்படவில்லை, உள்நுழைவு விருப்பங்கள் தரமற்றவையாக இருக்கிறது எனவும் ஆடியோ சேர்ப்பதில் குறை உள்ளது. அதேபோல் இது இந்திய தளம் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

மிட்ரான் பயன்பாட்டை எவ்வாறு பதிவிறக்குவது?

மிட்ரான் பயன்பாட்டை எவ்வாறு பதிவிறக்குவது?

இருப்பினும் பயனர்களின் குறையை வேகமாக தீர்க்கப்படுமா அல்லது பயனர்கள் உபயோகிப்பதில் சிரமம் ஏற்பட்டு வேறு தளத்திற்கு மாறுவார்களா என்பது கேள்வியாக உள்ளது.இந்த பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் கூகிள் பிளேயில் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்துவிட்டது. அதேபோல் இந்த ஆப் ஐஓஎஸ் பயன்பாட்டில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!

கவர்ச்சிகரமான இடுகை

கவர்ச்சிகரமான இடுகை

அதேபோல் டிக்டாக்கை போல் கவர்ச்சிகரமான இடுகை இதில் இருந்தாலும், இந்த செயலி ஓபன் செய்வதற்கும் வீடியோ பார்ப்பதற்கு லாக்-இன் செய்ய தேவையில்லை. இருப்பினும் வீடியோ பதிவிடவும், லைக் செய்வதற்கும் லாக் இன் செய்ய வேண்டும். இந்த செயலியில் உள்ள குறைபாட்டை வேகமாக சரிசெய்தால், டிக்டாக்குக்கு கண்டிப்பாக கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: gadgets.com

Best Mobiles in India

English summary
Mitron is a new Indian TikTok competitor app crosses 50 lakh downloads on google play store

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X