மீண்டு(ம்) வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்!

|

மிட்ரான் செயலி புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். தற்போது இந்த செயலி 3.7 ஸ்டார்கள் பெற்றுள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலி

இந்தியாவில் டிக்டாக் செயலி

இந்தியாவில் டிக்டாக் செயலி மிகவும் பிரபலமடைந்துள்ளது, இந்த செயலியில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக்கிற்கு ஏங்கி தவிப்பவர்களும், லைக் வரவில்லை என விபரீத முடிவுகளை எடுப்பதும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. டிக்டாக்கிற்கு அந்த அளவு ரசிகர்கள் இந்தியாவில் உள்ளனர்.

டிக்டாக்கிற்கு போட்டியாக இந்திய பயன்பாடு

டிக்டாக்கிற்கு போட்டியாக இந்திய பயன்பாடு

டிக்டாக்கிற்கு போட்டியாக இந்திய பயன்பாடு செயலியாக மிட்ரான் என்ற செயலி உருவாகியுள்ளது. குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்து செயலியில் மிட்ரான் இடம்பெற்றது. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட இந்த செயலியானது 50 லட்சம் பதிவிறக்கங்களை கடந்தது.

ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!

டிக்டாக் செயலி மீது இந்தியாவில் கடும் விமர்சனங்கள்

டிக்டாக் செயலி மீது இந்தியாவில் கடும் விமர்சனங்கள்

டிக்டாக் செயலி மீது இந்தியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் கொரோனா தொற்று காரணமாக சீனாவின் பொருட்கள் மற்றும் உற்பத்தி மீது அதிருப்தி நிலை ஏற்பட்டு இருந்த நேரத்தில், டிக்டாக் எதிராக களமிறங்கிய மிட்ரானுக்கு அதிக மதிப்பீடுகள் பெற்றது.

மிட்ரான் பயன்பாட்டை உருவாக்கிய ஐஐடி மாணவர்

மிட்ரான் பயன்பாட்டை உருவாக்கிய ஐஐடி மாணவர்

இந்த செயலியானது ஐஐடி ரூர்க்கி மாணவர் சிவங்க் அகர்வால் மிட்ரான் பயன்பாட்டை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்த பயன்பாடானது டிக்டாக்கின் குளோன் போலவே தெரிகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. கூகுள் ப்ளே தரவரிசைப்படி இலவசமாக அணுக கிடைக்கும் சிறந்த செயலிகள் பட்டியலில் மிட்ரான் ஏழாவது இடத்தை பிடித்தது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

இந்த நிலையில் மிட்ரான் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்து கூகுள் தளமோ, மிட்ரான் செயலியோ விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாகவே ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம்

முன்னதாகவே ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம்

மிட்ரான் செயலி முன்னதாகவே தங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால் அதை அப்படியே பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு சிக்கல்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த செயலி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தது.

தனியுரிமைக் கொள்கை

தனியுரிமைக் கொள்கை

தனியுரிமைக் கொள்கையை பதிவேற்றாததால், மிட்ரான் செயலிக்கு தனியுரிமை சிக்கல்கள் உள்ளன என க்யூபாக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூபாக்ஸ் தரப்பானது பாகிஸ்தான் நிறுவனமாகும் எனவும் இந்த நிறுவனத்திடம் மிட்ரான் மூலக் குறியீடு வாங்கப்பட்டுள்ளது. மிட்ரான் உருவாக்கிய அகர்வால் இந்த குறியீட்டை தனிப்பயனாக்கவோ அல்லது தனியுரிமை கொள்கையை மாற்றவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 பாதுகாப்பு குறைபாடுகள்

பாதுகாப்பு குறைபாடுகள்

தனியுரிமைக் கொள்கை மீறப்பட்டதன் காரணமாக இந்த செயலி அகற்றப்பட்டது. அதேபோல் மிட்ரான் செயலி பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் சரி செய்யப்பட்டால் இந்த செயலி மீண்டும் ப்ளேஸ்டோரில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எந்த பதிலும் இல்லை

எந்த பதிலும் இல்லை

இதுகுறித்து மிட்ரான் செயலியை தயாரித்த சிவங்க் அகர்வாலை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்ததாகவும், ப்ளே ஸ்டோரில் உள்ள மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பியதாகவும் இருப்பினும் அகர்வாலிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை!ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை!

புதுப்பிக்கப்பட்டு புதிய மாற்றங்கள்

புதுப்பிக்கப்பட்டு புதிய மாற்றங்கள்

இருப்பினும் தற்போது உள்ள செயலியில் தனியுரிமைக் கொள்கைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் வீடியோ பதிவேற்றங்களில் உள்ள சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளதாககவும் இதன்காரணமாக மிட்ரான் செயலி மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த செயலியானது முதலில் 4.5 ஸ்டாரும் இப்போது மீண்டும் கொண்டுவரப்பட்ட நிலையில் 3.7 ஸ்டாரும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mitron app now available on google play store with safe privacy policy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X