ரீ-சார்ஜ் செய்யும்போது இந்த தவறையெல்லாம் செய்யாதீங்க!!

By Super Admin
|

செல்போன் என்பது தற்போது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒரு நல்ல ஸ்மார்ட்போன் நம் கையில் இருந்தால் கிட்டத்தட்ட ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் நம் கையில் இருப்பதற்கு சமம்.

ரீ-சார்ஜ் செய்யும்போது இந்த தவறையெல்லாம் செய்யாதீங்க!!

டிவி, ரேடியோ, கம்ப்யூட்டர், கால்குலேட்டர், வணிகம், என பல்வேறு அம்சங்கள் கையடக்க செல்போனில் இருப்பதால் அது நமது உற்ற தோழனாகவும் விளங்கி வருகிறது.

செகண்ட் ஹேண்ட் போன்களை விற்பனை செய்ய சாம்சங் திட்டம்.!?

அதே நேரத்தில் நாம் சம்பாதிக்கு பணத்தின் பெரும்பகுதியை ரீ-சார்ஜ் செய்யவோ, போஸ்ட்பெய்ட் பில் கட்டவோ கூடாது. நாம் உபயோகிக்கும் திறனை பொறுத்து ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு பிளானில் நுழையும் முன்பு அந்த பிளான் நமக்கு செட் ஆகுமா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

இண்டர்நெட்டில் ஆக்கபூர்வமாக எப்படி செயல்பட வேண்டும்? 7 முக்கிய ஆலோசனைகள்

பொதுவாக ரீசார்ஜ் செய்பவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்:

பல்க் பிளான் உங்களுக்கு செட் ஆகுமா?

பல்க் பிளான் உங்களுக்கு செட் ஆகுமா?

கிட்டத்தட்ட எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அன்லிமிடெட் பல்க் பிளான்களை தற்போது அறிமுகம் செய்துள்ளன. நீங்கள் அதிகளவு போன் பேசுபவராக இருந்தாலோ அல்லது டேட்டாக்களை அதிகம் பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே இந்த பிளானை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அல்லது இந்த பிளான்களை நீங்கள் தவிர்த்துவிடுவது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் பர்ஸ்க்கும் நல்லது.

குறைந்த அளவு ரீசார்ஜ் பேக்கை செலக்ட் செய்யலாமா?

குறைந்த அளவு ரீசார்ஜ் பேக்கை செலக்ட் செய்யலாமா?

அதே நேரத்தில் தான் ஒரு சிக்கனவாதி என்பதை நிரூபிப்பதற்கோ அல்லது பணம் டைட்டான நேரத்திலோ குறைந்த அளவு ரீசார்ஜ் செய்வதையும் தவிரித்து விடுவது நல்லது. அடிக்கடி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது ஒரே நேரத்தில் ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்வதைவிட காஸ்ட்லி என்பது உங்களுக்கு போக போக தெரியவரும்

போஸ்பெய்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

போஸ்பெய்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

பிரிபெய்டு போல பேலன்ஸை பார்த்து பார்த்து, பயந்து பயந்து போஸ்ட் பெய்டில் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் சிறிய அளவில் உபயோகிப்பவராக இருந்தால் உங்களுக்கு போஸ்ட் பெய்டு செட் ஆகாது. உங்கள் தேவை மற்றும் அளவை அறிந்து போஸ்ட் பெய்டை தேர்வு செய்யுங்கள். மேலும் போஸ்ட் பெய்டிலும் பலவிதமான பேக்கேஜ்கள் இருப்பதால் தேர்வு செய்யும் முன் பலமுறை யோசியுங்கள்

போஸ்ட்பெய்டில் என்னென்ன மறைமுக கட்டணங்கள் இருக்கும்?

போஸ்ட்பெய்டில் என்னென்ன மறைமுக கட்டணங்கள் இருக்கும்?

பிரிபெய்டில் ரீசார்ஜ் செய்தவுடன் இவ்வளவு பேலன்ஸ் இருக்கும் என்பது நமக்கு உடனே தெரிந்துவிடும். ஆனால் போஸ்ட் பெய்டில் ஒவ்வொரு மாதமும் பில் வரும்போதுதான் என்னென்ன சார்ஜ் நமக்கு வந்துள்ளது என்பது தெரியவரும். ஆக்டிவேஷன் சார்ஜ், மாத வாடகை, என தனித்தனி பிரிவுகளில் நம்மிடம் இருந்து பணத்தை கறப்பார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.

நைட் டேட்டா பேக் நமக்கு தேவையா?

நைட் டேட்டா பேக் நமக்கு தேவையா?

நீங்கள் தினமும் இரவில் நெடுநேரம் விழித்து சிவராத்திரி கொண்டாடுவது போல டேட்டாவை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டும் நைட் டேட்டாவை ரீசார்ஜ் செய்யுங்கள். கும்பகர்ண வகையறாக்களுக்கு இது தேவையில்லை. ஒருசில நிறுவனங்கள் இரவில் இலவச டேட்டாக்களை தருகின்றன.அதையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை முக்கியமா கவனிக்கனும் சாரே!!

இதை முக்கியமா கவனிக்கனும் சாரே!!

ஒருசில நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் அதே அளவுக்கு இலவச டாக்டைம் சலுகையை அறிவிப்பார்கள். ஆனால் இவ்வகை சலுகை பேக்குகளில் மிகக்குறைந்த கால அளவு இருக்கும். இதனை கவனிக்காமல் நாம் ரீசார்ஜ் செய்தால் முழு இலவச சலுகைகளையும் நாம் உபயோகிக்க முடியாமல் போகலாம். எனவே ரீசார்ஜ் செய்வதற்கு முன்னர் காலாவதி தேதியை தெரிந்து கொள்ளுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
It is possible to recharge your phone with any pack that you wish to have. But, you need to spend time on finding out which pack will actually be useful for your mobile usage. Take a look at some mistakes you need to avoid.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X