AC, ஏர் கூலர்லாம் வேஸ்ட்.. சந்தையை கலக்கும் புது மிஸ்ட் Fan.. ரூ. 1999 இருந்தா வீடே ஊட்டி மாதிரி இருக்கும்..
ஏப்ரல் மாதம் துவங்க போகிறது. வெயிலின் (summer) தாக்கம் மிகவும் கொடூரமாக மாறப்போகும் நேரம் நெருங்கிவிட்டது. இதன் விளைவாக மக்கள் இப்போது வீடுகளில் வழக்கத்தை விட அதிகமாக ஏசி (AC) மற்றும் ஏர் கூலர் (Air Cooler) போன்ற சாதனங்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் காற்றை குளிர்ச்சி அடைய செய்யும் சாதனங்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. இருப்பினும், எல்லோராலும் AC மற்றும் ஏர் கூலர்களை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. இதனால் பல மாற்று சாதனங்களை மக்கள் இப்போது பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதில் ஒன்று தான் மிஸ்ட் ஃபேன் (Mist Fan).
வீட்டில் இருக்கும் வெப்பத்தை மிகவும் குறைந்த செலவில் சமாளிக்க வேண்டும் என்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான சாதனம் தான் இந்த மிஸ்ட் ஃபேன் டிவைஸ் (Mist fan device). குறிப்பாக, சில்லென்று காற்றும் வேண்டும் என்பவர்களுக்காக இப்போது சந்தையில் வாங்க கிடைக்கும் மிஸ்ட் ஃபேன்கள் (Mist Fan) தான் சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. இந்த புதுமையான சாதனத்தை பற்றிய முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சீலிங் ஃபேன் (Ceiling Fan) தெரியும், டேபிள் ஃபேன் (Table Fan) தெரியும், பெடஸ்டல் ஃபேன் (Pedestal Fan) தெரியும், கூலிங் ஃபேன் (Cooling Fan) தெரியும், ஏன் டவர் ஃபேன் (Tower Fan) கூட தெரியும், இது என்னப்பா புதுசா மிஸ்டிங் ஃபேன்னு (Misting Fan) சொல்றீங்க? என்று உங்களில் பலர் சந்தேகத்துடன் கேள்வி கேட்பது எங்களுக்கு தெரியும்.
இதன் பெயர் குறிப்பிடுவது போல, கொடைக்கானல் (kodaikanal) மற்றும் ஊட்டி (Ooty) குளிர்பிரதேசங்களில் காணப்படும் இயற்கையான மிஸ்ட் (Mist) போன்ற செயற்கை அமைப்பை இது உங்கள் வீட்டின் அறைகளுக்குள் உருவாக்குகிறது. தண்ணீரை மிஸ்ட் போல தெளிக்கும் ஒரு வகையான பிரத்தியேக ஃபேன் சாதனம் இதுவாகும். பார்ப்பதற்கு பெடஸ்டல் ஃபேன் போல காட்சியளிக்கும் இந்த மிஸ்ட் ஃபேன் அல்லது மிஸ்டிங் ஃபேன் சாதனத்தை (misting fan device) நீங்கள் உற்று கவனித்தால் தான் வித்தியாசம் தெரியும்.
இதன் முன்பக்கத்தில் சிறிய வாட்டர் டியூப் (water tube) போன்ற அமைப்பு வட்டமாக ஃபேன் கம்பிகள் மீது கிளிப் (clip) செய்யப்பட்டுள்ளது. இந்த டியூப்பின் சில பகுதிகளில் தண்ணீரை மிஸ்ட் போல ஸ்ப்ரே (spray) செய்யும் ஸ்ப்ரேயர் நாசல்கள் (sprayer nozel) பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம். இதை வீட்டில் நிறுவ பிரத்தியேக இன்ஸ்டாலேஷன் முறை என்று எதுவும் கிடையாது என்பதனால், இதை வாங்கி பயன்படுத்துவது எளிமையானது.
குறிப்பிட்ட சில உயர் மாடல் மிஸ்ட் ஃபேன்களில் தண்ணீரை சேமித்த வாய்க்கு சிறிய வாட்டர் டேங்க் (mist fan storage water tank) உடன் இந்த மிஸிட்ங் ஃபேன் சாதனங்கள் வருகின்றது. இந்த புதிய வகை மிஸ்ட் ஃபேன் என்று அழைக்கப்படும் மிஸ்டிங் ஃபேனுக்கு இப்போது இந்தியாவில் மவுசு அதிகரிக்க துவங்கியுள்ளது. அதிக காசு செலவழித்து ஏசி மற்றும் ஏர் கூலர் வாங்க முடியாத மக்களுக்கு இந்த சாதனம் இப்போது கைகொடுக்கும் தோழனாக மாறியுள்ளது.
உண்மை தான் மக்களே, இன்றைய வெயில் காலத்தில் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க ஏசி (AC) மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், எல்லோராலும் ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை செலவு செய்து புதிய ஏசியை வாங்க முடியாது. அப்படியே ஏசி வாங்கி பயன்படுத்தினாலும், மின்சார கட்டணம் (current bill) நிச்சயமாக 2 மடங்கு அல்லது 3 மடங்கு எகிறிவிடுகிறது. வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு AC வாங்கி மாற்றுவதும் பெரிய சிக்கலாக இருக்கிறது.
இப்படி AC சாதனத்தை வாங்கி பயன்படுத்துவதில் மக்கள் பல சிக்கலைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு அடுத்தபடியாக பட்ஜெட்டில் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் ஏர் கூலர்களை (Air cooler) வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விலை ரூ. 5000 முதல் ரூ. 20,000 வரை தான் இருக்கிறது. இதை வீட்டில் நிறுவ சுவர்களில் துளையிட வேண்டிய அவசியமில்லை. இதில் ஏசி அளவிற்கு குளுமையான காற்று இல்லை என்றாலும், ஒரு அளவிற்கு அறையின் வெப்பத்தை குறைகிறது.
குறிப்பாக ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்து ஏர் கூலரை (Air cooler usage) பயன்படுத்தினால் மட்டும் தான் ஏர் கூலரில் இருந்து வரும் காற்று மிகவும் கூலிங்காக சூப்பராக இருக்கும் (how to use air cooler in a best way). அல்லது ஏர் கூலர் டேங்கில் ஐஸ் கட்டிகளை (ice cubes) பயன்படுத்தினால் கூலிங் காற்று ஜில்லென்று வரும். இருப்பினும், 25L கொள்ளளவு கொண்ட ஏர் கூலர் சாதனங்கள் சாற்றி விலை அதிகமானதாக தான் இருக்கிறது. இதன் பட்ஜெட் விலையும் எல்லாருக்கும் பொருத்தமானதாக இருக்காது.
அதனால் தான் மலிவு விலையில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க இப்போது மிஸ்ட் ஃபேன் (mist fan) சாதனங்கள் பெரியளவில் பிரபலம் அடைந்து வருகின்றன. வெறும் ரூ.1999 முதல் ரூ.5000 விலை மட்டுமே செலவு செய்து, உங்கள் வீட்டின் அறையில் உள்ள வெப்பத்தை நீங்கள் தணிக்க முடிவு செய்தால், கட்டாயம் நீங்கள் மிஸ்டிங் ஃபேன் (misting fan) சாதனத்தை தான் வாங்க வேண்டும். இது குளிர்ச்சியான காற்றை தண்ணீருடன் பீச்சுவதனால், அறையின் வெப்பம் வேகமாக குறைகிறது.
உங்கள் அறையை உடனே குளிர்விக்கிறது. பெரிய அறைகளுக்கு இது மிகவும் ஏற்றது. தற்போது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் இந்த மிஸ்டிங் ஃபேன் சாதனம் மற்றும் மிஸ்டிங் ஃபேன் டியூப்கள் வாங்க கிடைக்கிறது. மிஸ்டிங் டியூப் சாதனத்தை நீங்கள் எந்த ஃபேன்னிலும் வேண்டுமானாலும் கிளிப் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்த டியூபை நீங்கள் தண்ணீர் வரும் ஒரு குழாய்யுடன் இணைக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. குறைந்த செலவில், உங்களிடம் இருக்கும் ஃபேனில் இதை இணைத்து பயன்படுத்தி பாருங்கள்.


Click it and Unblock the Notifications








