Home
News

பப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.!

இந்த சம்பவம் தொடர்பாக பிடிப்பட்ட சிறுவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் பப்ஜி விளையாட்டு அதிக வரவேற்பு பெற்றுள்ளது, குறிப்பாக இந்தியாவில் பப்ஜி செயலிகளை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் அன்மையில் பப்ஜி லைட் வெளியிடப்பட்டு முன்பதிவு தொடங்கியது.

 பப்ஜி லைட் வெர்ஷன்

பப்ஜி லைட் வெர்ஷன்

குறிப்பாக பப்ஜி லைட் வெர்ஷன் இதற்கு முன்பு ஹாங்காங், தைவான், பிரேசில் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்
வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டென்சென்ட் நிறுவனம் இந்திய கேமிங் சந்தையிலும் தனது பப்ஜி லைட் வெர்ஷனை அறிமுகம் செய்து வரும் ஜீலை 4-ம் தேதி முதல் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 கத்தரிக்கோலால் குத்திக் கொன்றார்

கத்தரிக்கோலால் குத்திக் கொன்றார்

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பப்ஜி விளையாடியதைத் தடுத்தற்காக உடன்பிறந்த அண்ணனை 15 வயது சிறுவன் கடந்த ஜீன் 29-ம் தேதி கத்தரிக்கோலால் குத்திக் கொன்றார்

 முஹம்மது ஷேக் கடுமையாகத் திட்டியுள்ளார்

முஹம்மது ஷேக் கடுமையாகத் திட்டியுள்ளார்

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தின் பிவான்டி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஷேக்(19). இவருடைய 15-வயது தம்பி எந்நேரமும் தனது செல்போனை எடுத்து பப்ஜி கேம்ஸ் விளையாடுவதைக் கண்டு ஆத்திரமடைந்த முஹம்மது ஷேக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

சுவரின்மீது மோதி காயப்படுத்தினான்

சுவரின்மீது மோதி காயப்படுத்தினான்

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் உடன்பிறந்த அண்ணன் என்றும் பாராமல் முஹம்மது ஷேக் மீது பாய்ந்தான். அவரை தாக்கி தலையைப் பிடித்து சுவரின்மீது மோதி காயப்படுத்தினான்.

 பலன் இல்லாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்

பலன் இல்லாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்

பின்பு இதிலும் ஆத்திரம் தணியாமல் வீட்டிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து சரமாரியாகக் குத்தினான், இதில் பலத்த காயமடைந்த முஹம்மதுவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலன் இல்லாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரித்து வருகின்றனர்

விசாரித்து வருகின்றனர்

இந்த சம்பவம் தொடர்பாக பிடிப்பட்ட சிறுவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Minor kills brother for not letting him play PUBG game : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X