Home
News

புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணீங்களா? உணவுத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. இதோ முழு விவரம்..

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு (ration card) விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு கார்டுகள் வழங்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதாவது தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலை பொருட்களை வாங்கவும், பொங்கல் பரிசு, பேரிடர் நிவாரணம் வாங்கவும் ரேஷன் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. இதை உணவு வழங்கல் துறை தான் வழங்குகிறது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வெங்கடரமணன், சென்னை எழிலகத்தில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.

புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணீங்களா?

குறிப்பாக எழிலகத்தில் செயல்படும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் உள்ள பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களிடம் கூறியது என்னவென்றால், இது மக்களுக்கான அரசு என்பதால், மக்களுடன் பயணப்பட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிய முதல்வர் விஜய் கூறியுள்ளார். உணவு பொருள் வழங்கல் துறை பணியாளர்கள் தங்களது பணியிட மாற்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.

அதேபோல் ரேஷன் பொருள்கள் விரைவில் கடைகளுக்குச் சென்றடைவதையும், தரத்துடன் இருப்பதையும் உறுதி செய்யப்படும். இதுதவிர கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகப் புகார்கள் கிடைத்துள்ளன. உரிய பயனாளிகளை ஆய்வு செய்து விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்ப்பது எப்படி?
அதேபோல் தற்போது உங்கள் வீட்டு ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை நீங்களே மிகவும் எளிதாக இணைக்க முடியும். இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது திருமணம் அல்லது குழந்தை பிறந்த பிறகு புதிய உறுப்பினர்கள் குடும்பங்களில் இணைகிறார்கள். ஆகவே அவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்ப்பது மிகவும் அவசியம் ஆகும். அதுவும் உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்ந்திருந்தால், உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் அவர்களின் பெயரை ரேஷன் கார்டில் எளிதாகச் சேர்க்க முடியும்.

அதுவும் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அதாவது வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மொபைல் நம்பர் போன்றவை தேவைப்படும்.

குடும்பத்துக்குப் புதிதாக வந்துள்ள மருமகளின் பெயரைச் சேர்க்க விரும்பினால் அவருடைய ஆதார் கார்டு, திருமண சான்றிதழ் மற்றும் தந்தையின் ரேஷன் அட்டையில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது என்பதைக் குறிப்பிடும் சான்றிதழ் தேவைப்படும். மேலும் குழந்தையின் பெயரை சேர்க்க விரும்பினால் அக்குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ரேஷன் கார்டு ஆகியவை தேவைப்படும்.

ஆன்லைன் வழியில் பெயரைச் சேர்க்கும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் இருந்தால் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. அதாவது மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்வதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். அதுவும் இணையதளத்தில் உங்களது உள்நுழைவு ஐடியை உருவாக்கி, போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். அடுத்து முகப்பு பக்கத்தில் உள்ள புதிய உறுப்பினரைச் சேர்க்கவும் (Add New Member) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் விண்ணப்பப் படிவத்தில் புதிய உறுப்பினரின் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் சரியாக நிரப்ப வேண்டும். மேலும் அதில் கோரப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்தவுடன் உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். அதைக் கொண்டு உங்களது விண்ணப்பத்தை எளிதாகக் கண்காணிக்கலாம். குறிப்பாக சரிபார்ப்பு செயல்முறை முடிந்த பிறகு புதிய ரேஷன் கார்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணீங்களா?

நேரடி முறையைத் தேர்வு செய்யலாம்
தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் நேரடி முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இதைச் செய்ய அருகில் உள்ள உணவு வழங்கல் மையத்தில் செல்ல வேண்டும். அங்குப் படிவத்தை நிரப்பி தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். அதன்பின்பு நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, உங்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படும்.

அதன்பின்னர் ரேஷன் துறை அதிகாரிகள் உங்கள் ஆவணங்களை நேரில் சரிபார்ப்பார்கள். அனைத்து சரியாக இருந்தால் புதிய உறுப்பினரின் பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்படும்.

Best Mobiles in India

English summary
Minister Venkataraman announced that new ration cards will be issued soon in Tamil Nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X