'நோக்கு வர்மம்' சாத்தியம்..!?

By Meganathan
|

'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடல் வரிகளை உண்மையாக்கும் தொழில்நுட்பம் உலகில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்றே கூற வேண்டும். நீங்கள் நினைப்பவைகளை நடத்திக்காட்டும் தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஈடுப்பட்டுள்ளனர்.

 'நோக்கு வர்மம்' சாத்தியம்..!?

தொழில்நுட்ப கருவிகளை கொண்டு உங்களது கனவு நிலையை கண்டறிவது, மூளையை கொண்டு குறிப்பிட்ட ஒருவரை அடையாளம் காண்பது, மூளையை மட்டும் பயன்படுத்தி தொலைகாட்சி பெட்டியை இயக்குவது போன்றவை உண்மையில் சாத்தியமா இல்லையா என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

கட்டுப்பாடு

 'நோக்கு வர்மம்' சாத்தியம்..!?
தொலைகாட்சியில் சேனல்களை மாற்ற தொலைகாட்சி பெட்டியின் அருகில் செல்ல வேண்டிய அவசியத்தை ரிமோட் கண்ட்ரோல்கள் எப்பொழுதோ நீக்கி விட்டன என்றே கூற வேண்டும். இதையும் தாண்டி பிபிசி ஐ ப்ளேயர் கருவியை, மூளை மூலம் இயக்க வழி செய்கின்றது. இந்த ஐ ப்ளேயரில் நினைத்தாலே பாட்டு தானாக மாறும்..

நினைவு

 'நோக்கு வர்மம்' சாத்தியம்..!?
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் டீகோடர் தொழில்நுட்பமானது, மனிதர்கள் புத்தகத்தில் ஒரு பத்தியை படித்து முடித்தவுடன் மூளை நினைப்பவற்றை அர்த்தமாக்கி கொள்ளும். தொடர் ஆய்வுகளில் இந்த தொழில்நுட்பமானது தகவல்களை பறிமாற்றி கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ப்ரெயின் ப்ரின்ட்

 'நோக்கு வர்மம்' சாத்தியம்..!?
குறிப்பிட்ட நபர் ஒருவரை அடையாளம் காண மூளையின் எண்ண ஓட்டத்தை பயன்படுத்தும் முறை தான் ப்ரெயின் ப்ரின்ட். ஆய்வுகளில் இம்முறையானது சுமார் 94 சதவீதம் சரியான முடிவுகளை அளித்ததாக இந்த ஆய்வை மேற்கொண்ட ப்ரிங்ஹாம்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கனவு

 'நோக்கு வர்மம்' சாத்தியம்..!?
ஜப்பான் நாட்டை சேர்ந்த யுகியாசூ கமித்தானி மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களை எஃப்எம்ஆர்ஐ ( FMRI ) கருவியில் உறங்க வைத்து அதன் பின் அவர்களின் கனவு நிலை தகவல்களை பதிவு செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் கனவில் நடக்கும் சம்பவங்களை கணினி மூலம் கண்டுபிடிப்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

எண்ணம்

 'நோக்கு வர்மம்' சாத்தியம்..!?
மனிதர்கள் அடுத்து என்ன செய்ய இருக்கின்றார்கள் என்பதை கண்டறியும் முதற்கட்ட வழி முறைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்து விட்டனர் என்றே கூற வேண்டும். இந்த ஆய்வில் பங்கேற்றோருக்கு ஒரு வேலையை செய்ய சொல்லி, அதன் பின் அவர்களது கார்டெக்ஸ் செயல்பாட்டினை அறிந்து அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை கணிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mind Reading Tech Projects That Freak You Out. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X