நீங்க மனசுல நினைச்சா நாங்க கண்டுபிடிப்போம்.!!

Written By:

இந்த நூற்றாண்டில் ஆப் எனும் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தாலே மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றது.

'தொழில்நுட்பம் இதுவும் செய்யும் இதற்கும் அதிகமாகவும் செய்யும்' இந்த தொகுப்பினை படித்து முடித்தால், இது தான் பெரும்பாலானோரின் மனக்குரலாக இருக்கும். இப்பவே உங்க மனநிலையை சரியாக கண்டுபிடிச்சிட்டோமா, இது எப்படி சாத்தியம் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மென்பொருள்

மென்பொருள்

கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிக்னல்

சிக்னல்

மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் ( மின்சாதன சமிக்ஞை ) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நொடிகள்

நொடிகள்

மேலும் மனிதர்கள் மனதில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணித்து விட முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுதிறனாளிகள்

மாற்றுதிறனாளிகள்

இந்த ஆய்வு முடிவுகளை வைத்து பார்க்கும் போது, ஒரு நாள் இந்த வகை தொழில்நுட்பம் பேச முடியாத, தகவல் பரிமாற்றத்தில் சிரமத்தினை எதிர்கொள்பவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரான ராஜேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

பக்கவாதம்

பக்கவாதம்

மருத்துவ ரீதியாக பார்க்கும் போது இம்முறையை பயன்படுத்தி பக்கவாத நோயாளிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வழி செய்ய முடியும் என்றும் ராவ் தெரிவித்தார்.

ஆய்வு

ஆய்வு

முன்னதாக 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மனித மூளையில் நினைப்பவைகள் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று 2014 ஆம் ஆண்டு இரு ஆய்வாளர்கள் மூளையில் இருந்து மற்றொருவரது மூளைக்கு தகவல்களை பரிமாறி கொண்டனர்.

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Mind-Reading Computer Instantly finds out People's Thoughts Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot