Just In
- 1 hr ago
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- 16 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 17 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 17 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- News
திருவண்ணாமலை தீப திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் தரிசனம்
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுந்தர்பிச்சை வேலைக்கு ஆபத்து! லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்...
உலகிலுள்ள அனைவருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் வேலையின் மீது ஒரு கண். உங்களுக்கு இல்லையா? உலகில் மிக அதிக ஊதியம் பெறும் வேலைகளில் இதுவும் ஒன்று என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?.

போலி காலிப்பணியிடத்தை உருவாக்கியுள்ளார்
இதில் விசித்திரம் என்னவெனில், யாரோ ஒருவர் வணிக வலையமைப்பு சமூகவலைதளமான லிங்கிடுஇன் தளத்தில் இந்த வேலைக்கு காலியிடும் இருப்பதாக போலி காலிப்பணியிடத்தை உருவாக்கியுள்ளார். மற்றும் அது உண்மை என நம்பிய பலர் அந்த வலையில் விழுந்ததுடன் (ரொம்ப நம்பிக்கை!), அந்த பணிக்கு விண்ணப்பித்தும் உள்ளனர். ஆனால் எப்படி & ஏன்?

பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடைபெற்றுள்ளது
சுந்தர்பிச்சையின் கூகுள் சிஈஓ காலிப்பணியிடத்திற்கான பதிவு ஒரு பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடைபெற்றுள்ளது. இதை லிங்கிடுஇன் தளமும் ஒப்புக் கொண்டது. இந்த குறைபாட்டின் காரணமாக, எந்தவொரு நிறுவனத்தின் லிங்கிடுஇன் பக்கத்திலும் அதிகாரப்பூர்வ காலிப்பணியிட பதிவை இட பயனர்களை அனுமதிக்கும். இந்த குறைபாடானது டச்சு நாட்டைச் சேர்ந்த ரெக்ரூட்டர் மைக்கேல் ரிஜண்டர் என்பவரால் வெளிப்படுத்தப்பட்டது.
மூன்றாம் ஆர்பிட் ரைசிங் சக்ஸஸ்! நிலவில் எப்போ தரை இறங்க போகிறோம் தெரியுமா?

லிங்கிடுஇன்
இதுதொடர்பாக லிங்கிடுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது " சிறியஅளவிலான பணம் செலுத்தும் எவரும் லிங்கிடுஇன் தளத்தில் காலிப்பணியிட பதிவை இட முடியும். இது மிகவும் எளிதானது. வேலை தரும் நிறுவனம் போன்ற ஒரு சில விவரங்களை மட்டும் நிரப்ப வேண்டும். இங்கு தான் பிரச்சனையே உள்ளது. எல்லோரும் தங்கள் தேர்வு செய்த நிறுவனங்களுக்காக காலிப்பணியிட பதிவுகளை செய்ய முடியும். உதாரணமாக நான் லிங்கிடுஇன்-ல் காலிப்பணியிட பதிவை இட முடியும்." என்கிறார்.
ஆகஸ்ட் 1: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை அறிவிப்பு.!

கூகுள் சிஈஓ பணியிடம்
மேலும் இந்த செயலியானது விண்ணப்பங்களை லிங்கிடுஇன்-க்கு அனுப்ப பரிந்துரைத்தாலும், கூகுள் சிஈஓ பணியிடம் போல பயனர்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கு தனிப்பயன் இணைப்புகளை (Custom links) உருவாக்கிக்கொள்ளலாம்.

மோசமான விசயம் என்னவெனில்
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பணியிடம் போலவே, லிங்கிடுஇன் சிஈஓ பதவிக்கு போலி வேலைவாய்ப்பை பின்னர் உருவாக்கி காண்பித்தார் மைக்கேல். இதில் மோசமான விசயம் என்னவெனில் , மேலும் கொஞ்சம் பணத்தை செலவளித்தால் இந்த போலி பதிவை அதிக நபர்களை சென்றடைய வைக்க முடியும். ஆனால் இங்கு போலி காலிப்பணியிட பதிவு என்பது மட்டுமே பிரச்சனை அல்ல.

கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும்
மைக்கேல் தனது பதிவில் குறிப்பிட்டபடி, இத்தகைய போலி காலிப்பணியிட பதிவுகள் பங்குச் சந்தையையும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளையும் தள்ளாட வைக்கும் திறன் கொண்டவை. ஒரு நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரியை மாற்றுவதற்கு முயன்றுவருகிறது என்பது, அதன் பிராண்டிற்கும் நிதி நிலைமைக்கும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.

கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு நன்றி
இந்த குறைபாடு குறித்த பதிவுக்கு பதிலளித்த லிங்கிடுஇன், " இதை எங்களது கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு நன்றி மைக்கேல் " என்று தெரிவித்துள்ளது.
"நாங்கள் அந்த போலியான பதிவை அகற்றியுள்ளோம் மற்றும் இந்த பதிவை நேரடியாக பதிவிட அனுமதித்துள்ள குறைப்பாட்டையும் சரிசெய்துவருகிறோம் . லிங்கிடுஇன் உண்மையான நபர்கள் தங்களது தொழில் பற்றி உண்மையான உரையாடல்களை நடத்துவதற்கான ஒரு இடம். போலி பணியிடங்களுக்கு இங்கு இடம் இல்லை. தானியங்கி தொழில்நுட்பம் மூலமும்,சந்தேகத்திற்குரிய காலிப்பணியிட பதிவுகளை எங்கள் உறுப்பினர்களின் உதவியுடனும் ரிப்போர்ட் செய்வதன் மூலமும், போலி பதிவுகள் எங்களது உறுப்பினர்களை சென்றடைவதை தடுக்க பணியாற்றி வருகிறோம்." என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு காலியிடமும் இல்லை
எனவே சுந்தர் பிச்சை மற்றும் ஜெஃப் வீனிர் இருவரும் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் விரைவில் அவற்றை நிரப்ப எந்தவொரு காலியிடமும் இல்லை!
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090