நோக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய விற்பனைக்கு காரணம் என்ன?

By Siva
|

நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டில் ஏற்கனவே நோக்கியா 6, நோக்கியா 8, மற்றும் நோக்கியா 3 ஆகிய மூன்று புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்நிறுவனம் மேலும் இரண்டு புதிய மாடல்களான நோக்கியா 2 மற்றும் நோக்கியா 9 ஆகிய இரண்டு மாடல்களை இவ்வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

நோக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய விற்பனைக்கு காரணம் என்ன?

நோக்கியா நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் அதன் விலை மற்றும் அதன் தரமான பொருள் என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு இதன் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் இந்த போட்டியான ஸ்மார்ட்போன் உலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன இந்நிறுவனத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை HMD குறிப்பிட்டு சொல்லவில்லை.

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

என்னதான் இருந்தாலும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக நோக்கிய போன்களின் விற்பனை இல்லை என்றாலும், இந்த நிறுவனத்தின் நோக்கம் இதுபோன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது

கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கையின்படி HMD மார்க்கெட்டிங் அதிகாரி பெக்கா ரண்டல் என்பவர் கூறிய ஆலோசனை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இவருடைய முக்கிய ஆலோசனை காரணமாகத்தான் நோக்கியா நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் மில்லியன் கணக்கிலும் பத்து மில்லியன்களுக்கும் மேலான பீட்சர் போன்களும் விற்பனையாகியுள்ளது.

நோக்கிய போனின் மிகப்பெரிய வெற்றிக்கு முதல் காரணமாக கூறப்படுவது இந்த போன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளுக்கு சப்போர்ட் செய்வதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோக்கியா மாடல் போன்களின் மூலம் சுமார் ஒரு மில்லியனில் இருந்து 5 மில்லியன் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் நோக்கியாவின் மாடல்கள் மில்லியன் கணக்கான விற்பனை சாத்தியமாகியுள்ளது.

மேலும் நோக்கிய ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் ஆண்ட்ராய்ட் ஓரியோ அப்டேட் உள்ளது. எனவே தான் இந்த விற்பனையின் எண்ணிக்கை குறித்து ஆச்சரியம் ஏற்படவில்லை. இந்த ஆண்ட்ராய்டு ஓரியா அப்டேட் நோக்கியா 8 மாடலுக்கு இந்த அக்டோபரிலும், மற்ற மாடலுக்கு இவ்வருட இறுதியிலும் அப்டேட் செய்ய முடிவெடுத்துள்ளதால் நோக்கியா போன் வாங்கியவர்கள் உற்சாகத்தில் உள்ளனர் '

Best Mobiles in India

Read more about:
English summary
It becomes clear that millions of Nokia Android smartphones have been sold by HMD Global since the debut of these phones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X