சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!

|

ட்காயிபின் உண்மையில் உலகையே உலுக்கியெடுத்துவிட்டது. அது எப்போதும் ஆபத்தான விஷயமாக இருந்தாலும், சிலர் ரிஸ்க் எடுத்து சாதித்து மில்லியனர் ஆகியுள்ளனர். நிச்சயமாக அனைவருக்கும் இது நிகழ்வது இல்லை. ஆனால் சிலர் அதிர்ஷ்டத்துடனேயே பிறந்துள்ளனர்.அவ்வகையில் எரிக் ஃபின்மேனை எடுத்துக்கொண்டால், அவர் பிட்காயினில் முதலீடு செய்து இளம் மில்லியனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

கேமிங் சாதனத்தை வாங்குவது போன்றவற்றை செய்யலாம்

கேமிங் சாதனத்தை வாங்குவது போன்றவற்றை செய்யலாம்

இது யார் வேண்டுமானாலும் அடையத்தக்க சாதனைதான் என்றாலும், 19 வயதிலேயே இதனைச் செய்து தனித்துவமானதாக மாற்றியுள்ளார். அவ்வளவு பணத்தை வைத்து ஃபின்மேன் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ஒருவேளை விருத்து கொடுப்பது, இரவு விடுதிகளுக்கு செல்லுவது சிறந்த கேமிங் சாதனத்தை வாங்குவது போன்றவற்றை செய்யலாம்.

அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!

ஸ்பைடர்மேன் படம்

ஸ்பைடர்மேன் படம்

ஆனால் மற்ற இளம் பருவத்தினரை விட புத்திசாலியாக இருந்தார் ஃபின்மேன். அவர் தனது பணத்தை ஒரு சிறப்பான வழியில் முதலீடு செய்தார். இது அவருக்கு அதிக பணம் சம்பாதிப்பதி தரப்போவதில்லை. அதாவது இப்போதைக்கு ​​இல்லை. அவரது வழிகாட்டிகளில் ஒருவரது மகனான அரிஸ்டூ மேஹன் என்பவர், டாக்டர் ஆக்டோபஸின் கரங்களின் இயங்கும் மாதிரியை உருவாக்கும் யோசனையை தெரிவித்தார். ஸ்பைடர்மேன் படம் பார்த்த யாரும் உடனடியாக இந்த ஆக்டோபஸ் கரங்களின் மாதிரியை கற்பனை செய்ய முடியும்.

ஃபின்மேன் தனது பணத்தை முதலீடு செய்தார்.

ஃபின்மேன் தனது பணத்தை முதலீடு செய்தார்.

காமிக் புத்தக ரசிகரான இந்த மேஹன் காமிக் கான்-ல் உள்ள உடைகளால் கவரப்பட்டு, அதைப் போன்ற ஏதாவது ஒன்று வேண்டும் என விரும்பினார். அதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவெனில் அந்த உடை செயல்பட வேண்டும் என விரும்பினார். உங்களிடம் யோசனை இருந்தால், உங்களுக்கு தேவையான ஒன்றே ஒன்று முதலீட்டாளர்கள். மேஹனின் கனவை நிஜமாக்க பணத்துடன் காத்திருந்தார் ஃபின்மேன். ஒரு பொறியாளர் குழுவுடன் இந்த ப்ராஜெக்ட்டில் ஃபின்மேன் தனது பணத்தை முதலீடு செய்தார்.

நடுவிரல் மூலம்  கட்டுப்படுத்தலாம்.

நடுவிரல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இந்த அற்புதமான படைப்பின் வெளிக்கூடு 3டி அச்சிடும் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இயந்திர கரங்கள் அணிபவர் மூலம் கட்டுப்படுத்தப்படும். இதற்காக பொருத்தப்பட்டுள்ள மைக்ரோப்ராசஸ்சர்கள் மற்றும் எட்டு மோட்டார்கள் ஆற்றலை வழங்கி இயந்திர கைகளுக்கு உயிர்கொடுக்கும். பயனர்கள் கையில் கையுறையை அணிந்துகொண்டு நடுவிரல் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம். இயந்திர கரங்களில் பல அச்சுகளை இணைக்கமுடியும் என்பதால் இறுதியில், இந்த உடையை டாக்டர் ஆக்டோபஸின் கரங்களை போலவே பயன்படுத்தலாம்.

ஆனால் இதில் முக்கிய விசயம் என்னவெனில் இந்த உடை ஃபின்மேனுக்காக உருவாக்கப்படவில்லை. அதற்குபதிலாக இதை அரிஸ்டூ மேஹனுக்காக உருவாக்கினார். ஃபின்மேனில் பல வழிகாட்டிகளில் ஒருவரின் மகனான அரிஸ்டூ மேஹன் ஹைபர்மொபிலிடி எனப்படும் இளகியமூட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு 10 வயது குழந்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பயங்கரமானது. ஆனால் அந்த குழந்தைக்கு ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும் என நினைத்து இதை உருவாக்கிய ஃபின்மேனுக்கு நிச்சயம் நன்றிகூறவேண்டும்.

இந்தியக் கொடியை மாற்றிப் பறக்கவிட்ட சியோமி.! சிக்கலில் பிளாக் ஷார்க் 2.!இந்தியக் கொடியை மாற்றிப் பறக்கவிட்ட சியோமி.! சிக்கலில் பிளாக் ஷார்க் 2.!

மகிழ்ச்சிக்கு எல்லையிலை

மகிழ்ச்சிக்கு எல்லையிலை

பொறியாளர் குழுவினருடன் பணிபுரிய ஆரம்பித்த ஃபின்மேன் தனது ஏராளமான பணத்தைத் இந்த ப்ராஜெக்ட்-ல் முதலீடு செய்தார். இதன் முடிவு ஆச்சர்யமான ஒன்று. இதன் மூலம் மேஹன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையிலைல். இதை மிகவும் விரும்பும் மேஹன், இதனால் பள்ளியில் மிகவும் பிரபலமாக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் இப்போது டாக்டர் ஆக்டோபஸ் கரங்களை பயன்படுத்தி முன்பு சாத்தியமில்லாத பலவற்றையும் மிகவும் இயல்பாகவே செய்கிறார்.

 நல்ல விசயங்களுக்காக செலவிடமாட்டார்கள்

நல்ல விசயங்களுக்காக செலவிடமாட்டார்கள்

இந்த அற்புத படைப்பை அதிகளவில் உற்பத்தி செய்து மனித இனத்தின் நன்மைக்காக பயன்பட வைப்பதுடன், இதன் வடிவமைப்பை ஓபன் சோர்ஸ் செய்து மற்ற பொறியாளர்கள் மேலும் இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார். இவையனைத்தின் மூலமும் அவர் இன்னும் பதின்ம வயதில் தான் உள்ளார் என்பதை கூட நம்மை மறக்கவைக்கிறார். என்னதான் அதிகளவில் பணம் இருந்தாலம் ,அனைவரும் அதை சரியான நோக்கத்தில் நல்ல விசயங்களுக்காக செலவிடமாட்டார்கள். ஆனால் ஃபின்மேன் அதை செய்து சாதித்துகாட்டியுள்ளார்.

 14-இன்ச் டிஸ்பிளேவுடன் ரெட்மிபுக் 14 சாதனம் அறிமுகம்.! 14-இன்ச் டிஸ்பிளேவுடன் ரெட்மிபுக் 14 சாதனம் அறிமுகம்.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
millionaire-develops-octopus-suit-for-a-boy-suffering-hypermobility-issues : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X