இந்தியாவில் கிடைத்த மெகா சைஸ் புதையல்.! உலகமே இப்போ நம்மை பார்த்து பொறாமைப்படுது.! ஏன் தெரியுமா?
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நாம் இப்போது தொழில்நுட்ப உதவியுடன் கடந்து வருகிறோம். நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான சாதனங்கள் மின்சார மயமாகிவிட்டது. இவை மக்களின் வாழ்க்கையை மிகவும் சுலபமானதாக மாற்றியுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக நம்முடன் மின்சார சாதனங்கள் ஒரு அங்கம் போல ஒட்டிக்கொள்ள துவங்கிவிட்டன. குறிப்பாக, சில மின்சார உபகரணங்களை (Electronics devices) நாம் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் உருமாற்றம் அடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உபகரணங்களைப் பயன்படுத்த நேரடி மின்சாரம் (Electricity) இப்போது தேவைப்படுவதில்லை. இதற்குப் பதிலாக மின்சாரத்தை ஸ்டோர் செய்து பயன்படுத்த உதவும் பேட்டரிக்களால் (Battery) இயங்கும் படி இவை காலப்போக்கில் உருவ மாறிவிட்டன.

இந்தியாவில் கிடைத்த மெகா சைஸ் புதையல்.!
இந்த வகையில், பேட்டரிகள் மனித வாழ்க்கையை மிகவும் வசதியானதாக மாற்றப் பயன்படும் ஒரு பொருளாகவே மாறிவிட்டது என்று கூட நாம் கூறலாம். பேட்டரிகள் என்று பேசும்பொழுது லித்தியம் (Lithium) என்ற வேதிப்பொருளைப் பற்றிக் கேள்விப்படாமல் நீங்கள் இருந்திருக்கவே முடியாது. லாப்டாப், கார், மின்சார வாகனம் என்று மின்சாரத்தை சேகரித்து வைத்துப் பயன்படுத்து அனைத்து பேட்டரிகளிலும் லித்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூமியின் எதிர்காலத்திற்கு இந்த லித்தியம் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. காரணம், இனி வரும் ஆண்டுகளில், எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric vehicles) தான் பெரியளவில் பயன்படப்போகிறது. இதனால், உலக நாடுகள் லித்தியதை ஒரு பொக்கிஷமாகப் (Lithium treasure) பார்க்கிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் அவர்களது பகுதியில் லித்தியம் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வுகள் நடத்தி வருகின்றது. அதில் இந்தியாவும் ஒன்று.

அடேங்கப்பா.! இந்தியாவில் மட்டும் இத்தனை டன் லித்தியம் பதுங்கி கிடக்கிறதா?
லித்தியம் கனிமம் தொடர்பான இந்த ஆய்வில் இந்தியாவிற்குத் தான் ஜாக்பாட் அடித்துள்ளது. உண்மை தாங்க! இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட லித்தியம் தொடர்பான ஆய்வில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரைசி என்னும் மாவட்டத்தில் சலால் - ஹைமன பகுதியில் சுமார் 5.9 மில்லியன் டன் (59 லட்சம் டன்) அளவிலான லித்தியம் இருப்பதாகத் (Lithium in India) தெரியவந்துள்ளது. இந்த தகவலை இந்தியாவின் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் (Union Ministry of Coal and Mines of India) உறுதி செய்துள்ளது.
இந்த செய்தி தற்போது மற்ற உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ளது. லித்தியம் வெறும் சாதாரண ஒரு கனிம பொருள் அல்ல, அதன் தேவை இன்றைய சூழ்நிலையில் நீங்கள் நினைத்துப் பார்ப்பதை விட அதிகம். இந்தியாவில் லித்தியம் சுரங்கம் (Lithium mine in India) இல்லாததால், இதுவரை இங்குத் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குத் தேவையான லித்தியத்தை நாம் பல்வேறு உலக நாடுகளில் இருந்து இறக்குமதி (Lithium import) செய்து தான் பயன்படுத்தி வந்தோம்.

இந்தியாவின் நிலையே எதிர்காலத்தில் மாறப்போகிறதா?
ஆனால், இனி அந்த நிலைக்கு இடமில்லை. ஒரு நாடு அதிகப் படியான இறக்குமதிகளைச் செய்யும் போது அதன் பொருளாதாரம் பாதிக்கப்படும். மக்களுக்குத் தேவையான சலுகைக்கு நிதி கிடைக்காது. ஆனால், இந்தியாவில் இப்போது கிடைத்துள்ள இந்த லித்திய புதையலால் (Lithium found in India), இந்திய பொருளாதாரத்திலும் பெரும் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உலக நாடுகள் அவர்களுக்கு தேவையான லித்தியத்தை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி (Lithium export from India) செய்துகொள்ள முன்வருவர்.
இனி லித்தியத்திற்காக நாம் மற்ற நாடுகளை நாடியிருக்கவும் அதற்காக அதிகப் பணம் செலவிடவும் அவசியம் இல்லை. அதே சமயம், மற்ற நாடுகளுக்கு லித்தியத்தை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானமும் கிடைக்கும். எலக்ட்ரானிக் பொருட்களின் பேட்டரிகள் மட்டுமின்றி மருந்து கலவை, மண் பாண்டங்கள், அலுமினியம், கண்ணாடி என்று பல்வேறு விதமான பொருட்களின் உற்பத்தியிலும் லித்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் உச்சம் தொடும்.! பொறாமையில் மற்ற நாடுகள்.!
குறிப்பாகச் சமீப காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) தேவையான பேட்டரிகளை தயாரிக்க லித்தியம் ஒரு முக்கியமான மூலப்பொருள் ஆகும். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த லித்தியத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் உச்சத்தை அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலை டாப்பில் செல்லப்போகிறது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம், மற்ற நாடுகள் நம்மை பார்த்து பொறாமைப்படுவதும் நமக்கு தெரிகிறது.


Click it and Unblock the Notifications