Home
News

மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன்கள்: சராசரி இந்தியர்களுக்கு குறி.. இது அவசியமா, ஆடம்பரமா?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் (Military Grade Protection) கொண்ட ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. ரூ.15,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இப்போது, மிலிட்டரி கிரேடு புரொடெக்சனை பார்க்க முடிகிறது. மிட்-ரேஞ்ச் மாடல்களில் மட்டுமே கிடைத்துவந்த டாப்-வாட்டர் ப்ரூப் கூட இப்போது பட்ஜெட்டில் கிடைக்க தொடங்கி இருக்கிறது. சாராசரி இந்தியர்களை குறிவைத்து களமிறங்கி வரும் இந்த மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அவசியமா அல்லது ஆடம்பரமா என்பது குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.

MIL-STD-810H புரொடெக்சன் என்றால் என்ன?
மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் என்பது ராணுவ தரத்திலான குவாலிட்டி டெஸ்ட்களுக்கு உட்படுத்தப்பட்ட டிவைஸ் என்பதை குறிக்கிறது. ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில், MIL-STD-810H என்னும் சர்டிபிகேஷன் வருகிறது. இந்த சர்டிபிகேஷன் பெறுவதற்கு என்விராண்மெண்டல் டியூரபிலிட்டி டெஸ்ட் செய்திருக்க வேண்டும். அமெரிக்க பாதுகாப்புத் துறை இதை அறிமுகப்படுத்தியது.

மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன்கள்: சராசரி இந்தியர்களுக்கு குறி!

* ஷாக்ஸ் மற்றும் டிராப்ஸ் (Shocks & Drops)
* வைப்ரேஷன்கள் (Vibrations)
* எக்ஸ்ட்ரீம் டெம்ப்ரேச்சர்கள் (Extreme Temperatures)
* ஹியூமிடிட்டி (Humidity)
* டஸ்ட் & சாண்ட் (Dust and Sand)

ஷாக்ஸ் மற்றும் டிராப்ஸ் (Shocks & Drops):
ஸ்மார்ட்போனானது குறிப்பிட்ட தொலைவில் இருந்து கீழே விழுந்தால் பாடி டேமேஜ் ஏற்படாமல் இருக்கவும், அதுபோன்ற டிராப்களினால் ஏற்படும் ஷாக்களின்போது இன்டர்னல்-டேமேஜ் ஏற்பாடமல் இருக்கவும் இந்த டெஸ்ட் செய்யப்படுகிறது. ஆகவே, மற்ற மாடல்களைவிட இந்த ரெசிஸ்டன்ட் இருக்கும் மாடல்களுக்கு அதிக டியூரபிலிட்டி கிடைக்கும்.

வைப்ரேஷன்கள் (Vibrations):
கார், பஸ் போன்ற குறிப்பிட்ட வைப்ரேஷன்கள் மட்டுமல்லாமல், பைக், பை-சைக்கிள் போன்ற அதிக வைப்ரேஷன்களிலும் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி டெஸ்ட் செய்ய்பட்டிருக்கும். இதன் மூலம் அதிக வைப்ரேஷன்களின் போதும், இன்டர்னல் கோளாறுகள் ஏற்படாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்.

மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன்கள்: சராசரி இந்தியர்களுக்கு குறி!

எக்ஸ்ட்ரீம் டெம்ப்ரேச்சர்கள் (Extreme Temperatures):
இந்த மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷனில் அதிக வெப்பம் (60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்) மற்றும் அதிக குளிர் (-30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழ்) நேரங்களிலும் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் இல்லாமல், இருக்க டெஸ்ட் செய்யப்படுகிறது.

ஹியூமிடிட்டி (Humidity):
மழைப் பிரதேசங்கள், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்க கூடிய வகையில் இருக்க இந்த டெஸ்ட் செய்யப்படுகிறது. இதன் மூலம் பருவ மழை, சைக்லோன் போன்ற காலங்களில் ஸ்மார்ட்போனை தடையில்லாமலும், கோளாறு ஏற்படாமலும் பயன்படுத்த முடிகிறது.

மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன்கள்: சராசரி இந்தியர்களுக்கு குறி!

டஸ்ட் & சாண்ட் (Dust and Sand):
ஸ்மார்ட்போன்களில் அதிக ஸ்பீக்கர், மைக், சார்ஜிங் போர்ட் போன்ற பல்வேறு ஹோல்கள் இருக்கின்றன. இதில் டஸ்ட் மற்றும் மணல் துகள்கள் புகுந்தால், அது இன்டர்னல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கும்படியான பில்ட் மற்றும் டெஸ்ட்டிங் செய்யப்படுகிறது.

இப்படி ஏகப்பட்ட டெஸ்ட்களுக்கு உட்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கே MIL-STD-810H சர்டிபிகேஷன் கொடுக்கப்படும். இது வழக்கமாக கொடுக்கப்பட்ட புரொடெக்சன் என்றாலும், மிட்-ரேஞ்ச் போன்களில் மட்டுமே அதிகமாக கிடைத்தது. சமீப காலமாக, ரூ.15,000 பட்ஜெட் மாடல்களிலேயே MIL-STD-810H கிடைக்கிறது.

மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன்கள்: சராசரி இந்தியர்களுக்கு குறி!

மாடல்: விவோ டி4எக்ஸ்5 (Vivo T4x 5G)
விலை: ரூ.14,999
மாடல்: ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G)
விலை: ரூ.12,999
மாடல்: ஓப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G)
விலை: ரூ.12,999
மாடல்: ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14x 5G)
விலை: ரூ.14,999

இந்த புரொடெக்சன் அவசியமா, ஆடம்பரமா?
இந்தியாவில் இருக்கும் சராசரி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த MIL-STD-810H புரொடெக்சன் அவசியமானதாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள், மெஷினரி ஆப்ரேட்டர்கள், ஸ்விக்கி உள்ளிட்ட டெலிவரி ஏஜென்ட்கள் முதல் நமது நாட்டின் விவசாயிகள் உள்பட ஏகப்பட்ட பீல்டு வொர்க்கர்கள் இருக்கிறார்கள்.

மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன்கள்: சராசரி இந்தியர்களுக்கு குறி!

இவர்களுக்கு பட்ஜெட்டில் இதுபோன்ற டிராப் ரெசிஸ்டன்ட், ஷாக் ரெசிஸ்டன்ட், டெப்ரேச்சர் ரெசிஸ்டன்ட் கிடைப்பது என்பது, அவர்களுக்கு தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அதேபோல மேற்கண்ட மாடல்களில் IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் போன்ற வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், பீல்டு வொர்க்கர்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களாக இவை இருக்கின்றன.

Source 1 Source 2

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X