மிக்-23பி.என் ரக கார்கில் போர் விமானம் விற்பனைக்கு வந்ததா? உண்மை என்ன?

|

இப்போதுவரும் சில புதிய தொழில்நுட்பம் பல்வேறு வகையில் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது, ஆனால் ஒரு சிலர் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

 கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட மிக்-23ரக விமானம்

அன்மையில் ஓ.எல்.எக்ஸ் இணைய தளத்தில், கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட மிக்-23ரக விமானம் விற்பனைக்கு வந்துள்ளதாக விளம்பரம் வெளியானது. இதை தொடர்ந்து அந்த விளம்பரத்தின் ஸ்கீரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

-23பி.என் ரக போர் விமானம் ஆனது

குறிப்பாக மிக்-23பி.என் ரக போர் விமானம் ஆனது கடந்த 1981-ம் வருடம் ஜனவரி 24-ம் தேதி அன்று இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது. பின்பு 1999-ம ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட இந்த விமானம் 28ஆண்டுகள் இந்திய விமானப்படைக்கு சேவையாற்றியது.

மலிவு விலையில் விற்பனைக்கு வந்த Realme C11 ஸ்மார்ட்போன்! விலை என்ன தெரியுமா?மலிவு விலையில் விற்பனைக்கு வந்த Realme C11 ஸ்மார்ட்போன்! விலை என்ன தெரியுமா?

கடந்த 2019-ம் ஆண்டு இந்த விமானம்

அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு இந்த விமானம் ஓய்வுபெற்றதாக அறிவிக்கப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது. குறிப்பாக இந்திய விமானப் படையிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட முதல் விமானம் இதுதான்.

ல் ஏ.எம்.யூ வளாகத்தில் நிறுவப்பட்ட

மேலும் 2009-ல் ஏ.எம்.யூ வளாகத்தில் நிறுவப்பட்ட இந்த போர் விமானத்தைக் கொண்டு,பொறியியல் மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் அந்த விமானம் ஓ.எல்.எக்ஸில் விற்பனைக்கு வந்ததாக சர்ச்சை கிளம்பியது. அந்த விளம்பரத்தில் போர் விமானத்தின் விலை 9,99,99,999 ரூபாய் என்றும்,இது ஒரு சிறந்த போர் விமானம் என்றும் குறிபிடப்பட்டிருந்தது.

விளம்பரம் வலைதளங்களில் வைரலானதை

உடனே போர் விமான விளம்பரம் வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஓ.எல்.எக்ஸ் இணையதளத்திலிருந்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. பின்பு போர் விமான விளம்பரம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரியும் பேராசிரியருமான முகமது வாசிம் அலி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு கூறியது என்னவென்றால்,

இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரேனோ 4ப்ரோ.! விலை மற்றும் விபரங்கள்.!இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரேனோ 4ப்ரோ.! விலை மற்றும் விபரங்கள்.!

பல்கலைக்கழகம் சார்பில் போர்
விமானத்தை விற்பனை செய்ய எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை, அந்த விளம்பரம் போலியானது. பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுக்க நினைத்து சிலர் செய்த சதி வேலைதான் இது. மேலும் இந்த விளம்பரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். இந்த விளம்பரத்தை பதிவேற்றியவர் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

பல்கலைக்கழகம்தான் போர்

குறிப்பாக பல்கலைக்கழகம்தான் போர் விமானத்தை விற்பனை செய்ய முன் வந்துள்ளதா? என்பது போன்ற விவாதங்கள் சமூக
வலைதளங்களில் எழத் துவங்கிய நிலையில், பல்கலைக்கழக தரப்பில் இருந்து இது முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
MiG-23 IAF Aircraft Installed At AMU Campus Listed For Sale On OLX More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X