மைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.!

இந்த அப்ளிகேஷன், தற்போது விண்டோஸ் 10 பிஸி, எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றில் அளிக்கப்படுகின்றன.

|

தங்கள் சாதனங்களை ஆதரிக்கக் கூடிய விதவிதமான டிஜிட்டல் ஸ்டோர்களில் இருந்து, த மூவீஸ் எனிவேர் அம்சத்தை பயன்படுத்தி, ஒரு பயனரால் உள்ளடக்கங்களைக் கண்டு களிக்க முடியும்.

மைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.!

இந்த வகையில், பிரபல முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனக்கு கீழ் செயலாற்றும் எண்ணற்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி, விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 10 மொபைல் பிளாட்பார்ம் ஆகியவற்றில் வாங்குவது, பயனர்களுக்கு பெரும் உபயோகமாக உள்ளது.

இந்நிலையில், மொபைல் தளங்களில் செயல்படுவதை நிறுத்தப் போவதாகவும் மொபைல் ஓஎஸ்இஎஸ்-களுக்கான (ஆப்ரேட்டிங் சிஸ்டம்கள்) ஏற்கனவே கிடைக்கப் பெறும் அப்ளிகேஷன்களுடன் சில புதிய அப்ளிகேஷன்களுக்கு மாறுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இது குறித்து விண்டோஸ் சென்ட்ரல் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்காக, மைக்ரோசாஃப்ட்டிற்கு சொந்தமான மூவீஸ் மற்றும் டிவி அப்ளிகேஷனை உருவாக்கி வருகிறது. இந்த அப்ளிகேஷன், தற்போது விண்டோஸ் 10 பிஸி, எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றில் அளிக்கப்படுகின்றன.

முன்பு விண்டோஸ் 10 மொபைல்களிலும் அளிக்கப்பட்டு வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில், தற்போது பயனர்களுக்கு உள்ளடக்கத்தை கண்டு களிக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் உள்ள உள்ளடக்கத்தை பயனர்கள் வாங்குவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அப்ளிகேஷனை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்போது பெரும்பாலான பயனர்களால் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோஸ் மற்றும் பல்வேறு உள்ளடக்க சேவைகளை ஸ்ட்ரீம்மிங் செய்ய விரும்புவதோடு, அதற்கு மாறிக் கொண்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது உள்ள உள்ளடக்கங்கள், முழுமையான முறையில் உடனடியாக ஸ்ட்ரீம்மிங் செய்ய கிடைப்பது இல்லை. இந்த அப்ளிகேஷன்கள் மூலம் மேற்கூறிய பிரச்சனை தீர்க்கப்படுவதோடு, மைக்ரோசாஃப்ட்டின் ஸ்டோரின் வருமானத்தையும் பெருகச் செய்யும்.


இது தவிர, மூவீஸ் எனிவேர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஜாம்பவான் நிறுவனம் விரைவில் இணைய தயாராகி வருவதாக அறிவித்துள்ளது. தங்கள் சாதனங்கள் ஆதரிக்கக் கூடிய விதவிதமான டிஜிட்டல் ஸ்டோர்களில் இருந்து, த மூவீஸ் எனிவேர் அம்சத்தை பயன்படுத்தி, ஒரு பயனரால் உள்ளடக்கங்களைக் கண்டு களிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்டில் இருந்து ஒரு திரைப்படம் பயனரால் வாங்கப்படும் பட்சத்தில், அதே திரைப்படத்தை கூகுள் ப்ளே-யைப் பயன்படுத்தி கண்டு களிக்க முடியும். ஏனெனில் கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகியவை மூவீஸ் எனிவேர் அம்சத்தை ஆதரிக்கக் கூடியவை ஆகும்.

மைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.!

ஆனால் இப்போதைக்கு மேற்கூறிய இந்த அப்ளிகேஷன்கள் எப்போது வெளியிடப்படும் என்பதை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எங்களுக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், இந்த அப்ளிகேஷன்களுக்கு எந்தொரு நிலையான வெளியீட்டு தேதியையும் இல்லை. எனவே அவை விரைவில் வெளியாகலாம் என்று பயனர்கள் எதிர்பார்க்கக் கூடாது. மேலும் பயனர்களுக்காக அவை எப்போது தயாராகும் என்று விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கூகுள் தொடர்பான எங்களின் சமீபகால கட்டுரைகளில், இன்டர் பென்டியம் செயலிகள் மூலம் மைக்ரோசாஃப்ட் அஃப்போர்டபிள் சர்பேஸ் டேப்லெட்கள் இயக்கப்படலாம் என்று நாங்கள் தெரிவித்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Microsoft’s Movies and TV will soon be available for Android and iOS platform: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X