'உலகின் மிக சக்திவாய்ந்த எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ்' சாதனத்தை அறிமுகம் செய்கிறது மைக்ரோசாப்ட்..

|

மைக்ரோசாப்டின் சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த எக்ஸ்பாக்ஸ் கன்சோல் ஒரு மினி ஃப்ரிட்ஜ் போலவே தோன்றுகிறது என்று கிண்டல் செய்யப்பட்டது. அதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு டிவிட்டர் கருத்துக் கணிப்பைச் நடத்தியது, ஸ்கிட்டில்ஸுக்கு எதிரான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் எக்ஸ்பாக்ஸ் போன்ற மினி ஃப்ரிட்ஜை உருவாக்கும் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நிறுவனம் இப்போது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மினி பிரிட்ஜ் சாதனத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ்

எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ்

இப்போது, நடந்து வரும் இ3 மாநாட்டின் போது, இந்த ஆண்டு விடுமுறைக் காலத்தில் எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ் என்ற புதிய மினி ஃப்ரிட்ஜ் சாதனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் தோற்றம் அப்படியே எக்ஸ்பாக்ஸ் கன்சோல் போன்று தான் காட்சியளிக்கிறது. வரவிருக்கும் எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ் (அதிகாரப்பூர்வ பெயர்) தான் "உலகின் மிக சக்திவாய்ந்த மினி ஃப்ரிட்ஜ்" என்று மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.

மினி சைசில் சக்தி வாய்ந்த பிரிட்ஜ்

மினி சைசில் சக்தி வாய்ந்த பிரிட்ஜ்

எக்ஸ்பாக்ஸ் சீரி எக்ஸ் கன்சோலுக்கான முக்கிய மார்க்கெட்டிங் புள்ளியில் இது விளையாடும் என்று கூறப்படுகிறது. இது எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கன்சோலுக்கான நிறுவனத்தின் முக்கிய சந்தைப்படுத்தல் புள்ளிகளில் ஒன்றின் வெளிப்படையான முயற்சிதான் இந்த எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ் என்று கூறப்படுகிறது. பச்சை நிற லைட்களுடன் மினி சைசில் இந்த பிரிட்ஜ் அட்டகாசமாகத் தோற்றமளிக்கிறது.

'ஒன் ஏர்டெல்' திட்டம்: இது ஒரே திட்டம் தான் ஆனா DTH, பைபர்நெட், லேண்ட்லைன் எல்லாம் இலவசம்..விலை இது தான்..'ஒன் ஏர்டெல்' திட்டம்: இது ஒரே திட்டம் தான் ஆனா DTH, பைபர்நெட், லேண்ட்லைன் எல்லாம் இலவசம்..விலை இது தான்..

'எக்ஸ்பாக்ஸ் வேலோசிட்டி கூலிங் ஆர்கிடெக்சர்' தொழில்நுட்பம்

'எக்ஸ்பாக்ஸ் வேலோசிட்டி கூலிங் ஆர்கிடெக்சர்' தொழில்நுட்பம்

உலகின் மிக சக்திவாய்ந்த மினி ஃப்ரிட்ஜாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் கூறும் இந்த சாதனம் 'எக்ஸ்பாக்ஸ் வேலோசிட்டி கூலிங் ஆர்கிடெக்சர்' என்ற அதிநவீன சக்திவாய்ந்த கூலிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் வடிவிலான முதல் குளிர்சாதனப் பெட்டி அல்ல என்பதையும் மைக்ரோசாப்ட் வில்களியுள்ளது. முழு அளவிலான சீரிஸ் எக்ஸ் வடிவ குளிர்சாதன பெட்டியை நவம்பர் 2020 இல் நிறுவனம் அறிமுகம் செய்தது.

விலை என்ன?

இதன் விலை 200 டாலர் முதல் 300 டாலர் வரை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ் தவிர, மைக்ரோசாப்ட் E3 மாநாட்டின் போது புதிய கேம்களையும் நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸில் 11 புதிய டைட்டில்களைச் சேர்த்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், இது மைக்ரோசாப்ட் நிறுவனம் 2020 இல் வாங்கிய பெதஸ்தா ஸ்டுடியோக்களுடன் புதிய கேம்களை அறிவிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்

மைக்ரோசாப்டின் சமீபத்தில் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தமைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் இந்தியாவில் ரூ.102,999 என்ற விலைப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது. லேப்டாப் 11-த் ஜெனரேஷன் இன்டெல் கோர் மற்றும் ஏஎம்டி ரைசன் 5 அல்லது ரைசன் 7 மொபைல் செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு வசதியோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Microsoft Xbox Mini Fridge Release Date Set For Holiday 2021 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X