Blue Screen of Death.. Restart லூப்பில் சிக்கிய Microsoft Windows பயனர்கள்.. Crowdstrike Update வச்ச ஆப்பு!
உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயனர்கள் பிஎஸ்ஓடி (BSOD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் எரர்களை (Blue Screen of Death Errors) எதிர்கொள்கின்றனர். பலர் தங்கள் லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் ரீஸ்டார்ட் வளையத்தில் சிக்கியிருப்பதை விஷயத்தை எக்ஸ் தளம் வழியாக புகாரளித்துள்ளனர். இந்த பிரச்சனை, அமெரிக்காவில் உள்ள லோ-காஸ்ட் விமான நிறுவனமான ஃபிரான்டியர் உட்பட பல்வேறு அமைப்புகளை சீர்குலைத்துள்ளது, இது விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு பூதாகாரமாகி உள்ளது.
இந்தியாவில், இண்டிகோ, ஆகாசா மற்றும் ஸ்பைஸ்ஜெட் அமைப்புகள் செயலிழந்ததால் மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் விமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் இதுதொடர்பான இடையூறுகளை உறுதிப்படுத்தியது. வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையின்படி "எங்கள் சிஸ்டம் தற்போது மைக்ரோசாஃப்ட் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது, இது மற்ற நிறுவனங்களையும் பாதிக்கிறது. உங்கள் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம்." என்று ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

மறுகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக்கொண்டது மற்றும் அதை தீவிரமாக விசாரித்தும் வருகிறது. எக்ஸ் வழியாக ஒரு பயனர், மைக்ரோசாஃப்ட் 365 ஸ்டேட்டஸ் ஆனது "பல்வேறு மைக்ரோசாஃப்ட் 365 ஆப்கள் மற்றும் சேவைகளை அணுகும் பயனர்களின் திறனை பாதிக்கும் ஒரு சிக்கலை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் "பாதிக்கப்பட்ட போக்குவரத்தை, மாற்று அமைப்புகளுக்கு மாற்றியமைப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றும் மைக்ரோசாஃப்ட் 365 ஸ்டேட்டஸ் கூறியுள்ளதாம்.
எக்ஸ் தளமானது பிஎஸ்ஓடி எரர்கள் குறித்த போஸ்ட்டுகளால் நிரம்பி வழிகிறது. பயனர்கள் பிஎஸ்ஓடி குறித் தங்கள் ஏமாற்றங்களையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பயனர் "விண்டோஸ் கிராஷ்டு! உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இந்த சிக்கலை எதிர்கொள்வது போல் தெரிகிறது.. தயவு செய்து இதை சரி செய்ய வேண்டாம். @Microsoft உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளவும் என்று கூறியுள்ளார்.
மற்றொருவர், "விண்டோஸ் டவுன். எல்லா இடங்களிலும் பி1. இப்படித்தான் எனது வார இறுதி செல்கிறது" என்று கூறியுள்ளார். இன்னொரு பயனர் "வேறு யாரேனும் #Windows11 லேப்டாப் திடீரென #BSODஐ எதிர்கொண்டு செயலிழந்ததா? எனக்கும் எனது பல சக ஊழியர்களுக்கும் நடந்தது!" என்று கேட்டுள்ளார்.
ப்ளூ ஸ்கிரீன் எரருக்கான காரணம் தான் என்ன? கிளவுட் அடிப்படையிலான செக்யூரிட்டி சொல்யூஷன்களை வழங்கும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Crowdstrike-ன் சமீபத்திய அப்டேட்டில் BSOD எரர்கள் இணைக்கப்பட்டதாக தெரிகிறது. எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் "விண்டோஸ்களை பயன்படுத்தும் Crowdstrike வாடிக்கையாளர்கள் இன்று காலை ப்ளூ ஸ்க்ரீன்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை Falcon சென்சாரில் உள்ளது மற்றும் இரவில் ஒரு அப்டேட் வந்தது" என்று விளக்கம் அளித்துள்ளார்.
மற்றொரு பயனர் "உங்கள் Windows 10 சிஸ்டமில் ப்ளூ ஸ்க்ரீன் சிக்கல் ஏற்பட்டால், ரீஸ்டார்ட் லூப்பில் சிக்கியிருந்தால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் தனியாக இல்லை. இது CrowdStrike அப்டேட் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய பிரச்சனை ஆகும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த சூழ்நிலையானது பல பயனர்கள் மற்றும் தங்கள் செயல்பாடுகளுக்கு விண்டோஸ் சிஸ்டங்களை நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








