அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான சிறப்பான தருணம்!

Posted By: Staff
அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான சிறப்பான தருணம்!

மைக்ரோசாப்ட் அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான விழா நடத்தப்பட இருக்கிறது. வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கும் இந்த அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான கண்காட்சியில் உலகளவில் இருந்தெல்லாம் நிறைய அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் கலந்து கொள்ளலாம்.

இப்படி பல தொழில் நுட்ப கலைஞர்களின் மூலம் உருவாக்கப்படும் புதிய அப்ளிக்கேஷன்கள், மைக்ரோசாஃப்டின் விண்டோஸ்-8 அப்ளிக்கேஷன் டெவலப்பர் விழாவில் சமர்ப்பிக்கப்படும். அப்படி சமர்ப்பிக்கப்படும் புதிய அப்ளிக்கேஷன்கள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூலம் சோதனை செய்து பார்க்கப்படும். அதன் பின் விண்டோஸ் மார்கெட்டில் சேர்க்கப்படும்.

தமிழ் மொழியிலும் புதிய அப்ளிக்கேஷன்களை, நிறைய தொழில் நுட்ப கலைஞர்கள் உருவாக்குகின்றனர். அப்படி உருவாக்கிய அப்ளிக்கேஷன்களை, விண்டோஸ் மார்கெட்டில் சேர்க்க வேண்டும் என்றால் இந்த மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-8 டெவலப்பர்கள் விழா சிறந்த தருணமாக இருக்கும்.

தமிழ் மொழி சம்மந்தமான அப்ளிக்கேஷன்களை உருவாக்குவதன் மூலம், தமிழ் மொழியினை பயன்படுத்துபவர்களுக்கு நிறைய பயன்பாடுகள் பெற முடியும். அதற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள், இந்த மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-8 டெவலப்பர்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். இந்த விழாவில் எப்படி கலந்து கொள்வது? இதற்கு வழிகளும் நமது தமிழ் கிஸ்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

  • இதில் ஹோம், ட்ரேவல் மற்றும் அக்காமடேஷன் போன்ற பிரிவுகள் மேலே கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பிரிவில் ரெஜிஸ்ட்ரேஷன் என்ற பிரிவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

  • ரெஜிஸ்ட்ரேஷன் என்ற பிரிவை க்ளிக் செய்யவும். அதில் ரெஜ்ஸ்ட்ரேஷன் நவ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

  • அதில் பெயர், இமெயில் ஐடி போன்ற விவரப் பட்டியல்கொடுக்கப்பட்டிருக்கும். அதை நிரப்ப வேண்டும்.

  • எல்லா விவரங்களும் நிரப்பப்பட்ட பின்பு, கீழே சப்மிட் என்ற பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்படி பதிவு செய்த பின்பு, பதிவு உறுதி செய்யப்பட்டதாக, நாம் என்ன இமெயில் ஐடி முகவரியை விவரப்பட்டியலில் கொடுத்தோமோ, அந்த முகவரிக்கு மெயில் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot