இன்னும் உங்கள் லேப்டாப்பில் Windows 10 பயன்படுத்துகிறீர்களா? இனி வேண்டாம்.. Microsoft முக்கிய அறிவிப்பு..
உலகம் முழுவதும் அதிக பயனர்கள் தங்களது கணினி (Computer) மற்றும் லேப்டாப் (Laptop) சாதனங்களில் விண்டோஸ் 10 (Windows 10) பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் 11 (Windows 11) இயங்குதளம் வெளியான நிலையிலும் இன்னும் அதிக பயனர்கள் விண்டோஸ் 10 தான் பயன்படுத்தி வருகின்றனர். காரணம் என்னவென்றால் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான ஆதரவை 2025 அக்டோபர் 14-ம் தேதியுடன் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும் இந்த புதிய இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் 10 பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

குறிப்பாக வரும் அக்டோபர் 14-ம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்திற்குப் பாதுகாப்பு புதுப்பிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆதரவுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து கிடைக்காது என்று கூறப்படுகிறது. எனவே இது சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, பயனர்களின் கணினி மற்றும் லேப்டாப்களை இலகுவாக ஹேக் செய்ய வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் பிரபலமான ESET சைபர் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், விண்டோஸ் 10 பயனர்கள் உடனே தங்கள் இயங்குதளத்தைப் புதுப்பிக்க வேண்டும். அக்டோபர் 2025 வரை காத்திருக்காமல், விரைவில் விண்டோஸ் 11-க்கு மாறும்படி கூறியுள்ளது. அதேசமயம் உங்கள் சாதனத்தின் தொழில்நுட்பக் காரணங்களால் விண்டோஸ் 11-க்கு புதுப்பிக்க முடியவில்லை என்றால், வேறு ஒரு மாற்று இயங்குதளத்தை (லினக்ஸ்) பரிசீலிக்கலாம்.
அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவு நிறுத்தப்பட்ட பின்பு விண்டோஸ் 10 இயங்குதளம் கணினி, லேப்டாப் சாதனங்கள் வைரஸ்கள், மால்வேர் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்பு அப்டேட்கள் இல்லாததால் சைபர் குற்றவாளிகள் ஏற்கனவே கண்டறிந்த மற்றும் புதிதாகக் கண்டறியப்படும் பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி பயனர்களின் கணினிகளில் ஊடுருவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பயனர்களின் சாதனங்களில் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுதல், நிதி மோசடிகள் மற்றும் கணினியின் கட்டுப்பாட்டை இழத்தல் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்க. மேலும் ESET நிறுவன ஐடி பாதுகாப்பு நிபுணர் தோர்ஸ்டன் அர்பன்ஸ்கி தெரிவித்தது என்றால் உடனே விண்டோஸை புதுப்பிக்க வேண்டும். வரும் அக்டோபர் வரை காத்திருக்கும் பயனர்கள் சைபர் தாக்குதலுக்கு மற்றும் தரவு திருட்டுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர் என்று எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது விண்டோஸ் 10 பயனர்கள் அலட்சியமாக இருக்காமல் உடனே தங்கள் கணினியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதாவது உடனே விண்டோஸ் 11 அல்லது வேறு ஒரு இயங்குதளத்தைப் பயன்படுத்தத் தொடங்குவது மிகவும் நல்லது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப அம்சங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: es.digitaltrends.com


Click it and Unblock the Notifications








