லூமியா விண்டோஸ் போன்களுக்குான புதிய செயளியை வெளியிட்டது மைக்ரோசாப்ட்
ஜெஸ்ட்யூர் பீட்டா என்ற புதிய செயளியை லூமியா விண்டோஸ் போன்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதை கொண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேவை தொடாமல் செய்கை மூலம் பயன்படுத்தலாம்.

புதிய செயளி மூலம் வாடிக்கையாளர்கள் லூமியா போன்களை எடுத்து காதில் வைத்து அழைப்புகளை ஏற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[விண்டோஸ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்]
மேலும் அழைப்புகளை நிராகரிக்க போனை தலை கீழாக வைத்தாலே போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய செயளியின் சில அம்சங்கள் லூமியா 630, லூமியா 635 மற்றும் லூமியா 530 மாடல்களுக்கு மட்டும் குறைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தரப்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகம் எதிர்பார்க்கப்படும் மைக்ரோசாப்ட் மெக்லேரன் ஸ்மார்ட்போனிலும் ஜெஸ்ட்யூர் வசதி கொடுக்கப்படும், இதின் மூலம் பயனாளிகள் டிஸ்ப்ளேவை தொடமாலேயே ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும் என்றும் புதிய ஜெஸ்ட்யூரை நோக்கியா வடிவமைத்தது என்றும் அதை 3டி டச் மற்றும் ரியல் மோஷன் என்று குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications