ஏஜ் ஆப் எம்பயர்ஸ் கேம் போன்களில் வரப்போகிறது..
மைக்கிரோசாப்ட் நிறுவனம் தங்களது புகழ் பெற்ற ஏஜ் ஆப் எம்பயர்ஸ் கேமை ஐபோன் மற்றும் இதர ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் பயன்படும் வகையில் தயாரிக்க உள்ளது.
ஜப்பானின் கே லாப் நிறுவனத்துடன் மைக்கிரோசாப்ட் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்து மொபைல் கேம் உலகில் புதுமையை படைக்க உள்ளது.
இதற்க்கு முன் மைக்கிரோசாப்ட் நிறுவனம் எக்ஸ் பாக்ஸ் கேம்களையே அதிகம் தயாரித்து வந்தது. ஆனால் மொபைல் கேம் மக்களிடையே பிரபலமாக உள்ளதால் இதிலும் கால் பதிக்க உள்ளது.
Click Here For New Smartphones Gallery

மைக்கிரோசாப்ட் இதற்க்கு முன் ஐபோன் மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு சில மொபைல் கேம்களை தயாரித்து இருந்தாலும் தனது வெற்றி படைப்பான ஏஜ் ஆப் எம்பயர்ஸ் மூலம் மேலும் பிரபலம் ஆகலாம் என எண்ணுகிறது.
ஏஜ் ஆப் எம்பயர்ஸின் மொபைல் வெர்சன் 2014 மார்ச் இறுதியில் வெளியிடப்படும் என்று கே லாப் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
முதலில் ஏஜ் ஆப் எம்பயர்ஸ் கேம் ஆங்கிலத்தில் ஐபோன் மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களுக்கு தயாரிக்கப்படும் என்றும் பிறகு இதர மொழிகளிலும் வின்டோஸ் போன்களுக்கும் தயாரிக்கப்படும் என்றும் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
எது எப்படி என்றாலும் கேம் விரும்பிகளுக்கு இது இனிப்பான செய்தியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications