Just In
- 23 min ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- 46 min ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 51 min ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 2 hrs ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
Don't Miss
- News
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் "வலிமை"..டெல்டாவில் வெளுக்கப்போகும் கனமழை..பிப்.1ல் கவனம்
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய மைக்ரோசாப்ட் நிறுவனம்.! காரணம் என்ன?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. ஆனால் இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துளளது.மேலும் இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை என்னவென்றால், உக்ரைனில் இருந்து வரும் செய்திகள் மற்றும் புகைப்படங்களை
கண்டு வருத்தமடைகிறோம்.

ரஷ்யாவின் நியாமற்ற சட்ட விரோதமான இந்த ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம். தற்போது ரஷ்யாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள்மற்றும் சேவைகள் போன்ற அனைத்து விதமான புதிய விற்பனைகளையும் நிறுத்தி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதுதவிர உக்ரைன் மீதான ரஷ்யாவின் இணைய தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்று வருகிறோம்என்றும், பின்பு உக்ரைனில் இருக்கும் மக்களுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து வளங்களை திரட்டி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனம்.

அதேபோல் உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கை குறித்து பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு
வருகின்றன. அதிலும் உக்ரைன் மீதான் ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை தொடர்ந்து பல்வேறு பொது நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தி வருகிறது. மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுவத்துவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரஷ்யாவின் நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாகவும், ரஷ்யாவினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு துணை நிற்போம் எனவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470