வியக்கவைக்கும் விலையில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் அறிமுகம்.!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும், விலைக்கு தகுந்தபடி அனைத்து சிறப்பம்சங்களும் இருக்கும்.

தற்சமயம் மைக்ரோசப்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இதன் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
இந்த மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் ஆனது இன்டெல் கோர் ஐ3 முதல் ஐ7 வரை 11th Gen இன்டெல் இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட விண்டோஸ்
ஹார்டுவேர் செக்யூரிட்டி வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த சாதனத்தின் பேஸ் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் 32ஜிபி ரேம்,1டிபி எஸ்எஸ்எ வரை கான்பிகர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.0-ஐ ஆதரிக்கிறது இந்த அட்டகாசமான சாதனம்.
இந்த புதிய சாதனம் 4கே பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மைக்ரோசப்ட் டீம்ஸ் சான்று பெற்ற ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதேபோல் இந்த சாதனம் அதிகநேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. எனவே கணினி அதிக நேரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த சாதனம் பயனுள்ள வகையில் இருக்கும். பின்பு யூ.எஸ்.பி-சி போர்ட், யூ.எஸ்.பி-ஏ போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

இந்த சாதனத்தில் டால்பி ஆடியோ வசதியுடன் இரண்டு ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனம் ஈசிம் மற்றும் நானோ சிம் என இரண்டிலும் வேலை செய்கிறது.
மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.83,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,58,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications