விலை கொஞ்சம் ஒஸ்திதான் ஆனா அம்சங்கள் அதுக்கும்மேல்- அட்டகாச மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் இதோ!

|

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் இந்தியாவில் ரூ.102,999 என்ற விலைப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது. லேப்டாப் 11-த் ஜெனரேஷன் இன்டெல் கோர் மற்றும் ஏஎம்டி ரைசன் 5 அல்லது ரைசன் 7 மொபைல் செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு வசதியோடு வருகிறது.

மைக்ரோசாப்ட் லேப்டாப்

மைக்ரோசாப்ட் லேப்டாப்

மைக்ரோசாப்ட் இந்தியாவில் 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் என இரண்டு அளவுகளில் சர்பேஸ் லேப்டாப் 4ஐ அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் இந்தியாவில் வணிக மற்றும் கல்வி சார்ந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த மடிக்கணினியானது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அமேசானில் கிடைக்கும்.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 விலை குறித்து பார்க்கையில், இதன் 13.5 இன்ச் பேஸ் மாடல் விலை ரூ.102,999 முதல் ஏஎம்டி ரைசன் 5 4680யூ, 8ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு உடன் வருகிறது. அதேபோல் 15 இன்ச் ஏஎம்டி ரைசன் 4980 யூ 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி விலை ரூ.134,999 என கிடைக்கும். 13.5 இன்ச் மேற்பரப்பு லேப்டாப் 4 இன்டெல் கோர் ஐ5-1135 ஜி7 செயலி, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.151,999-க்கு கிடைக்கும்.

ஏஎம்டி ரைசன் 5

ஏஎம்டி ரைசன் 5

ஏஎம்டி ரைசன் 5 மாடலுக்கான சர்ஃபேஸ் லேப்டாப் வணிக எஸ்கேயூ மாடல்கள் விலை ரூ.105,499 எனவும் இன்டெல் கோர் ஐ7-1185ஜி7 16ஜிபி ரேம், 512 ஜிபி உள்சேமிப்பு கொண்ட 15 இன்ச் டாப் வேரியண்ட் விலை ரூ.177,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்கள், அமேசான்

சில்லறை விற்பனையாளர்கள், அமேசான்

இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் உள்ளூர் வணிக விற்பனையாளர்கள், அமேசான் தளத்தில் இந்த லேப்டாப்-ஐ ஆர்டர் செய்யலாம். மைக்ரோசாஃப்ட் நுகர்வோர் எஸ்கேயூ மாடல்களை 9 மாதங்கள் வரை விலைஇல்லா இஎம்ஐ உடன் வாங்கலாம். இது மாதத்திற்கு ரூ.11,444 முதல் தொடங்கும்.

11-வது ஜெனரேஷன் இன்டெல்கோர்

11-வது ஜெனரேஷன் இன்டெல்கோர்

சர்ஃபேஸ் லேப்டாப் 4, இரண்டு காட்சி அளவு விருப்பங்களில் வருகிறது. இது 13.5 இன்ச் மாடல் 2256 x 1504 ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, 15 அங்குல மாடல் 2496 x 1664 ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இரண்டுமே 3:2 விகித மற்றும் சர்ஃபேஸ் பேனா ஆதரவுடன் மல்டி டச் ஆகியவையோடு வருகிறது.

லேப்டாப் 11-வது ஜெனரேஷன் இன்டெல்கோர் மற்றும் ஏஎம்டி ரைசன் 5, ரைசன் 7 மொபைல் செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது. அதோடு இது 16 ஜிபி ரேம் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு வசதியோடு வருகிறது. லேப்டாப் விண்டோஸ் ஹலோ ஃபேஸ் அங்கீகாரத்துடன் வருகிறது.

19 மணிநேர பேட்டரி ஆயுள்

19 மணிநேர பேட்டரி ஆயுள்

மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் லேப்டாப் 4-ன் ஏஎம்டி ரைசன் மாறுபாடானது 19 மணிநேர பேட்டரி ஆயுள் உடன் வருகிறது. இதன் இன்டெல் மாறுபாடானது 17 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. இது யூஎஸ்பிசி, யூஎஸ்பிஏ, சர்ஃபேஸ் கனெக்ட் போர்ட் மற்றும் ஹெட்போன் ஜாக் அம்சத்தோடு வருகிறது. அதோடு இதில் 720 பிக்சல் வெப்கேம், டூயல் ஃபேர் ஃபீல்ட் மைக்ஸ், டால்பி அட்மோஸ் ஆதரவோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.0 ஆகிய இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Microsoft Surface Laptop Launched in India With 11-th Generation, 16GB RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X