இந்தியாவில் முதல் சாதனம் இதுதான்: பல்வேறு அணுகல் ஆதரவோடு மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ 3!

|

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ 3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சமீபத்திய விண்டோஸ் 11 ஓஎஸ் உடன் வரும் மைக்ரோசாப்ட்டின் இந்தியாவின் முதல் சாதனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 3 சாதனம் சமீபத்திய விண்டோஸ் 11 ஓஎஸ் உடன் வருகிறது. இந்த சாதனத்தின் முன் மற்றும் பின் புறத்தில் 1080 பிக்சல் கேமராக்களை கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ 3 இந்தியாவில் விண்டோஸ் 11 ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் விலை ரூ.42,999 ஆக இருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ 3

மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ 3

மைக்ரோசாஃப்ட் இந்தியாவில் சர்ஃபேஸ் கோ 3 2 இன் 1 லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப் விண்டோஸ் 11 உடன் முன்பே நிறுவப்பட்ட முதல் சாதனம் இதுவாகும். மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ 3 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ 3 லேப்டாப் பென்டியம் கோல்ட் 6500 ஒய் சிபியு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்எஸ்டி மாடலின் விலை ரூ.57,999 ஆக இருக்கிறது.

அமேசான் இந்தியா மூலம் முன்கூட்டிய ஆர்டர்

அமேசான் இந்தியா மூலம் முன்கூட்டிய ஆர்டர்

இந்த லேப்டாப் தற்போது அமேசான் இந்தியா மூலம் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. 2 இன் 1 டேப்லெட் முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு ரூ.9699 மதிப்புள்ள சர்ஃபேஸ் பேனா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சாதனம் நவம்பர் 23 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ 3 இந்தியாவில் விண்டோஸ் 11 ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விண்டோஸ் 11 ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் மைக்ரோசாஃப்ட் சாதனம் இதுவாகும்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்எஸ்டி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்எஸ்டி உள்சேமிப்பு

இன்டெல் பென்டியம் 6500 ஒய் மாடல் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.42999 ஆக இருக்கிறது. அதோடு 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இன்டெல் கோர் ஐ3 விலை ரூ.47,999 ஆக இருக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்எஸ்டி உள்சேமிப்பு இன்டெல் கோர் ஐ3 விலை ரூ.62999 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10.5 இன்ச் டச் டிஸ்ப்ளே

10.5 இன்ச் டச் டிஸ்ப்ளே

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ 3 சாதனமானது 1920 x 1280 பிக்சல் தீர்மானம் மற்றும் 3:2 விகிதத்துடனான 10.5 இன்ச் டச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. அதேபோல் டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியும் இருக்கிறது. கூடுதலாக இந்த லேப்டாப் சரிசெய்யக் கூடிய கிக்ஸ்டாண்டைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது டேப்லெட்டாகவும் மாற்ற அனுமதிக்கிறது.

1080 பிக்சல் கேமராக்கள் அணுகல்

1080 பிக்சல் கேமராக்கள் அணுகல்

இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு 10-வது ஜென் இன்டெல் கோர் செயலிகளை கொண்டிருக்கிறது. லேப்டாப் 544 கிராம் எடையுடன் 8.3 மிமீ தடிமன் அளவைக் கொண்டிருக்கிறது.

இந்த சாதனத்தின் முன் மற்றும் பின்புறத்தில் 1080 பிக்சல் கேமராக்களை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த லேப்டாப் ஆனது டால்பி ஆடியோ மற்றும் ஸ்டுடியோ மைக்ரோபோன்களுக்கான ஆதரவை கொண்டிருக்கிறது. சர்பேஸ் கோ 3 லேப்டாப் ஆனது 11 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. வேகமான இணைப்பு ஆதரவுக்கு எல்டிஇ மேம்பட்ட ஆதரவும் இருக்கிறது.

மைக்ரோ எஸ்டிஎக்ஸ்சி கார்டு ரீடர் வசதி

மைக்ரோ எஸ்டிஎக்ஸ்சி கார்டு ரீடர் வசதி

சர்ஃபேஸ் கோ 3 விண்டோஸ் 11 ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ப்ளூடூத் 5.0, வைஃபை 6 அம்சத்தோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில், இது யூஎஸ்பி சி போர்ட் மைக்ரோ எஸ்டிஎக்ஸ்சி கார்டு ரீடர் வசதியோடு வருகிறது. அதேபோல் பாதுகாப்பு வசதிக்கென விண்டோஸ் ஹலோ முக அங்கீகாரத் தர ஆதரவையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Microsoft Surface Go 3 Launched with Latest Windows 11 OS in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X