லூமியா செயலிகளுக்கு நோ சொல்லும் மைக்ரோசாப்ட்..!
விண்டோஸ் 10 இயங்குதளத்தினை மொபைல்களில் வழங்கும் நோக்கில் லூமியா செயலிகளை நிறுத்த இருப்பதாக அந்நிறுவனத்தின் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 கேமரா மற்றும் போட்டோ செயலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லூமியா செயலிகளை நிறுத்துப்படுகின்றது. எனினும் மொபைல்களில் இருக்கும் லூமியா செயலிகள் முற்றிலுமாக எடுக்கப்படமாட்டாது, ஆனால் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன் ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் என்றும் அதன் பின் அப்டேட்களும் வழங்கப்படமாட்டாது என மைக்ரோமேக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் செயலிகள் கருவிகளில் இருந்து நீக்கப்படமாட்டாது, ஆனால் விண்டோஸ் போன் ஸ்டோரில் செயலிகள் எடுக்கப்பட்டு விடும். இதனால் மொபைலில் ஸ்டோரி டெல்லர் செயலியில் இருக்கும் தகவல்கள் ஏதும் பாதிக்கப்படாது, ஒரு வேளை ஸ்டோரிடெல்லர் செயலியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உங்களுக்கு வேண்டுமானால் அவைகளை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
