கின்னஸ் சாதனை படைக்கும் மைக்கோரசாஃப்ட்!

Posted By: Staff
கின்னஸ் சாதனை படைக்கும் மைக்கோரசாஃப்ட்!

மைக்ரோசஃப்டின் கின்னஸ் சாதனை படைக்கும் 'மராத்தான்' அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் கண்காட்சி, கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் 21ம் தேதி அப்ளிக்கேஷன் டெவலப்பர்களை ஒன்று திரட்டி 'மராத்தான்' என்ற கண்காட்சியை பெங்களூரில் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

மைக்ரோசாஃப்ட் நடத்திய மாராத்தானில், 2 ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு கின்னஸ் ரெக்கார்டு உயர் அதிகாரிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கும் விஷயம் என்று தான் சொல்ல வேண்டும்.

நவீன உலகையே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு ஏராளமான தொழில் நுட்ப விஷயங்கள் இதில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் வர்த்தகம், கல்வி, நிதி, விளையாட்டு, மியூசிக், வீடியோ என்று மொத்தம் 20 பிரிவுகளின் அடிப்படையில் தொழில் நுட்ப வல்லுனர்களின் தகவல்களும், யுக்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டும், பதிவு செய்யப்பட்டும் இருக்கிறது.

மைக்ரோசஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ்-8 இயங்குதளத்திற்காக புதிய அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் அப்ளிக்கேஷன் டெவலப்பர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட வைத்து, அவர்களின் புதுமையான அப்ளிக்கேஷன்கள் சமர்பிக்கப்பட்டது. மேலும் இது பற்றி சில தகவல்கள் நமது தமிழ் கிஸ்பாட்டில் கடந்த 10ம் தேதி பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் 22ம் தேதி வரை அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான மராத்தான் நிகழ்ச்சி, மொத்தமாக 18 மணி நேரம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் நிறைய தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழச்சியில் சமர்ப்பிக்கப்படும் அப்ளிக்கேஷன்களை சோதித்துவிட்டு, சரியானதாக இருந்தால் அந்த அப்ளிக்கேஷன்கள் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் ஸ்டோரில் சேர்க்கப்படும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot