ஐபோனில் செய்திகளை வழங்கும் மைக்ரோசாஃப்ட் செயலி.!!
ஐஓஎஸ் 9 இயங்குதளத்தில் செய்திகளை வழங்கும் புதிய நியூஸ் ஆப் வெளியாகி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் கராஜ் தயாரித்த நியூஸ் ப்ரோ எனும் செயலி ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் பரிந்துரைகளை நன்கு கவனித்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நியூஸ் ப்ரோ செயலி வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் ஃபேஸ்புக் மற்றும் லின்க்டுஇன் கணக்குகளை ட்ராக் செய்து இந்த செயலி அவர்களுக்கான செய்திகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சைன் இன் செய்து தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக், டிசைன், ஃபைனான்ஷியல், ரியல் எஸ்டேட், ஹெல்த் கேர், எட்யூகேஷன், மேனுஃபேக்ச்யூரிங் உள்ளிட்ட பிரிவுகளை தேர்வு செய்யலாம். மேலும் நியூ் ப்ரோ செயலி பிங் மூலம் சக்தியூட்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் போன்று இல்லாமல் மக்களுக்கு தேவையான செய்திகளை எவ்வித குறுக்கீடுகளும் இன்றி வழங்க மைக்ரோசாஃப்ட் நியூஸ் ப்ரோ செயலி அமையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications