விண்டஸ் 7க்காக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 ப்ரவுசர்

மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோசாப்ட்டின் வெப் ப்ரவுசரான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரோரில் ஒரு புதிய வெர்சனை மிக விரைவில் மைக்ரோசாப்ட் களமிறக்க இருக்கிறது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 என்று அழைக்கப்படும் இந்த வெப் ப்ரவுசர் விண்டோஸ் 7 இயங்கு தளத்திற்கு சரியான பொருத்தமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த எக்ஸ்ப்ளோரர் 10 ப்ரவுசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் பழைய விண்டோஸ் இயங்கு தளங்களில் இயங்கும்.
மைக்ரோசாப்ட் புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை கண்ணும் கருத்துமாகக் கொண்டிருந்தாலும் இன்னும் ஏராளமான கணினிகள் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குவதை கவனமாகக் கண்கானித்து வருகின்றது. கடந்த 2009 வரை 670 மில்லியன் விண்டோஸ் 7 விற்பனை செய்யப்பட்டிருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்திருக்கிறது. அதனால் விண்டோஸ் 8 இயங்கு தளம் எல்லோர் மத்தியிலும் பிரபலமாக 2014 ஆண்டு வரை ஆகும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
தற்போது விண்டோஸ் 8ல் வரும் புதிய லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த எக்ஸ்ப்ளோரர் 10 மிகவும் வேகமாக இயங்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ப்ரவுசர் டேப்லெட் கணினிகளிலும் இயங்கும் வசதியைக் கொண்டுள்ளது. குரோம், மாசில்லா பயர் பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி போன்ற ப்ரவுசர்களுக்கு இந்த புதிய எக்ஸ்ப்ளோரர் 10 ப்ரவுசர் கடும் போட்டியாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications