விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019

இந்த புதிய எம்.எஸ்.ஆபீஸ் 2019 வெர்ஷனில் பல புதிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள புதிய செயலிகள் பயனாளிகளுக்கு மிகுந்த பயன்பாட்டை தரும்.

|

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது எம்.எஸ்.ஆபீஸ் 2019 என்ற வெர்ஷனை தனது கமர்சியல் பயனாளிகளுக்கு பிரிவியூ வடிவில் அளித்துள்ளது. இந்த புதிய வெர்ஷனில் ஏராளமான புதிய வசதிகள் உள்ளது. விண்டோஸ் பயனாளிகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த பிரிவியூ வடிவத்தையும் வழங்கியுள்ளது.

விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019.!

இந்த முழு வடிவம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதிகாரபூர்வமாக வெளிவரும் என தெரிகிறது. இந்த புதிய வெர்ஷன் எம்.எஸ்.,ஆபீசில் வேர்டு, எக்ஸெல், பவர்பாயிண்ட், அவுட்லுக், ஒன்நோட், பப்ளிஷர், ஆக்சஸ், புரொஜக்ட் மற்றும் விசியோ ஆகியவை புதிய வடிவில் கிடைக்கும் என்பதும், மேலும் எக்ஸ்சேஞ்ச், ஷேர் பாயிண்ட், புரொஜக்ட் சர்வர் மற்றும் ஸ்கைப் ஆகிய சர்வர் செயலிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எம்.எஸ்.ஆபீஸ் 2019 என்பது ஆபீஸ் 2016அன் அடுத்த பரிணாமம் ஆகும். மேலும் ஆபீஸ் 365ல் ரன் ஆகாத கம்ப்யூட்டர்களில் இந்த எம்.எஸ்.ஆபீஸ் 2019 ரன் ஆகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் சப்போர்ட் பக்கத்தில் இதனை எப்படி கையாள வேண்டும் என்ற குறிப்புகள் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019.!

மேலும் இந்த எம்.எஸ்.ஆபீஸ் 2019 என்பது விண்டோஸ் 10 இயங்குதளத்தில் மட்டுமே செயல்படும் என்பதும், இதில் உள்ள சர்வர் செயலிகள் விண்டோஸ் சர்வர் 2019ல் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேக் கம்ப்யூட்டர்களுக்கான எம்.எஸ்.ஆபீஸ் 2019 பிரிவியூ அடுத்த மாதத்தில் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் இந்த எம்.எஸ்.ஆபீஸ் 2019ஐ பயன்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019.!


இந்த புதிய எம்.எஸ்.ஆபீஸ் 2019 வெர்ஷனில் பல புதிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள புதிய செயலிகள் பயனாளிகளுக்கு மிகுந்த பயன்பாட்டை தரும். மேலும் எக்ஸெல் பவர்புல் டேட்டா அனாலிஸசை கொண்டுள்ளதாகவும், அதில் புதிய ஃபார்முலாக்கள், புதிய சார்ட்டுகள் ஆகியவை இருப்பதாகவும், அதேபோல் இதில் உள்ள பவர்பாண்ட், பிரசண்டேஷனுக்கு ஏற்ற வகையில் அதிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக மோர்ப் மற்றும் ஜூம் வசதி புதிதானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஜார்டு ஸ்பாட்டரோ கூறியுள்ளார். இந்த புதிய வடிவம் நிச்சயம் பயனாளிகளுக்கு மிகுந்த பயனை தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த புதிய எம்.எஸ்.ஆபீஸ் 2019ல் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் இதில் உள்ள பவர்பாயிண்ட் 2019 என்பது புதிய ஐகான்களை கொண்டுள்ளது. குறிப்பாக எஸ்விஜி, 3D இமேஜ்களுக்கு ஐகான்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள வேர்டில் அதிக டூல்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது ஆடியோ டூல் என்பது ஒரு சிறப்பம்சம். அதேபோல் அவுட்லுக் 2019ல் புதிய, எளிய வகையான இமெயில் அம்சங்கள் இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் உறுதி கூறியுள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019.!


மேலும் இந்த புதிய எம்.எஸ்.ஆபீஸ் 2019 பயனாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கால அளவு குறைவாக அளிக்கப்பட்டுள்ளது. இதில் மெயின்ஸ்டீர்ம் ஐந்து வருடங்களுக்கும், நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் இரண்டு வருடங்களுக்கும் மைக்ரோசாப்ட் அனுமதித்துள்ளது. இதற்கு முந்தைய வெர்ஷன்களில் மெயின்ஸ்டீர்ம் ஐந்து வருடங்களுக்கும், நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் ஐந்து வருடங்களுக்கும் மைக்ரோசாப்ட் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Microsoft Office 2019 Commercial Preview Now Available for Windows 10 Users ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X