Home
News

விரைவில் மைக்ரோசாப்ட்டின் எம்எஸ் ஆஃபிஸ் 2013..!!

By Karthikeyan
விரைவில் மைக்ரோசாப்ட்டின் எம்எஸ் ஆஃபிஸ் 2013..!!

மைக்ரோசாப்ட் ஆஃபிஸை இயக்கத் தெரியாவிட்டால் கணினியை யாரும் இயக்க தெரியாது என்று அர்த்தம் கொள்ளும் அளவுக்கு கணினி துறையில் எம்எஸ் ஆஃபிஸ் சாப்ட்வேரின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.

மைக்ரோசாப்ட் ஆபிஸில் வேர்ட், எக்சல், பவர்பாய்ண்ட், அவுட்லுக் போன்றவை வருகின்றன. மைக்ரோசாப்ட் ஆபிஸ், அலுவலகம், பள்ளி, நிறுவனங்கள் போன்றவற்றிக்கு மட்டும் அல்லாமல் எல்லா விதமாக பணிகளையும் செய்ய பயன்படுகிறது.

இந்த நிலையில், கூடுதல் வசதிகளுடன் எம்எஸ் ஆஃபிஸ் 2013 வெர்ஷனை மிக விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 (டெஸ்க்டாப் கணினிகளுக்கு மட்டும்) மற்றும் ஆபிஸ் 365 (க்ளவுடு சார்ந்த சேவை) ஆகியவற்றிற்கான முத்திரைகளும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த புதிய மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013ல் வேர்ட், எக்சல் மற்றும் அவுட்லுக் போன்றவை கணிசமான அளவு அப்டேட் செய்யப்படும் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக பவர்பாய்ண்ட் மேலும் பல வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல் ஆபிஸ் 365 க்ளவுட் சார்ந்த சேவையில் மைக்ரோசாப்ட் ஸ்கைட்ரைவை வழங்கும் என்றும் தெரிகிறது. இந்த ஆபிஸ் 365ஐ விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த ஆபிஸ் 365ஐ ஒரே லாகின் கொண்டு 5 கணினிகளில் இன்ஸ்டால் செய்யலாம்.

இந்த புதிய மைக்ரோசாப்ட் ஆபிஸ் மற்றும் ஆபிஸ் 365 ஆகியவை விண்டோஸ் 8 சாதனங்களில் குறிப்பாக டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் போன்களில் அட்டகாசமாக இயங்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X