விரைவில் களமிறங்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்கள்!

By Super
|
விரைவில் களமிறங்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்கள்!

சமீபத்தில் ஸ்மார்ட்போனுக்கான புதிய விண்டோஸ் இயங்குதளத்தினை, சான் ஃபிரான்ஸிஸ்கோவில் நேற்று நடந்த கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

நிறைய ஸ்மார்ட்போன்கள் விண்டோஸ்-8 இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வகையில் நோக்கியா லுமியா-920, எச்டிசி 8-எக்ஸ், சாம்சங் ஏவிட்-எஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் வருகிற நவம்பர் மாதம் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிறைய ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்டு மின்னணு சாதன உலகில் வரிசைகட்டி வந்தன. மற்ற இயங்குதளத்திற்கு சரியான போட்டியை விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இப்போது விண்டோஸ் போன் ஸ்டோரில் கிட்டத்தட்ட 1,20,000 அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அப்ளிக்கேஷன் வசதியினையும் சிறப்பாக பெற முடியும். விண்டோஸ்-8 ஸ்மார்ட்போன் இயங்குதளம் கொண்டு இயங்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X