மைக்ரோசாப்ட் 5 இன்ச் ஸ்மார்ட்போன் ரூ.10,199க்கு வெளியிடப்பட்டுள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனம் பட்ஜெட் விலையில் டூயல் சிம் கொண்ட லூமியா 540 ஸ்மார்ட்போனினை ரூ.10,199க்கு வெளியிட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் லூமியா 540 டூயல் சிம் விண்டோஸ் போன் 8.1 மூலம் இயங்குவதோடு லூமியா டெனிம் அப்டேட் வழங்கப்படும் என்பதோடு விண்டோஸ் 10 அப்கிரேடும் வழங்கப்படும் எந தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூமியா 540 டூயல் சிம் 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

மேலும் லூமியா 540 டூயல் சிம் கருவியில் ஒன் டிரைவ் க்ளவுட் ஸ்டோரேஜ் சுமார் 30ஜிபி வரை வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 8எம்பி ப்ரைமரி கேமரா ஆட்டோபோகஸ் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை யுஎஸ்பி 2.0, ப்ளூடூத் 4.0, வைபை ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ் மற்றும் 2200 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications