எளிதாக வேலை தேட 'ப்ராஜெக்ட் சங்கம்'-அறிவித்தது மைக்ரோசாஃப்ட்.!

Written By:

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்தியா நாதெல்லா அவர்கள் ஸ்மார்ட் சிட்டி,ஆதார் எண் மூலமாக தகவல்களை சரிபார்க்கும் ஸ்கைப் லைட் ஆப் மற்றும் வேலை தேடுவோருக்கான வேலைவாய்ப்புகளை எளிதாக தெரிந்துகொள்ளும் விதத்தில் ப்ரொஜெக்ட் சங்கம் உள்ளிட்ட பல மைக்ரோசாப்ட் திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தினார்.

அதுகுறித்த தகவல்கள் கீழே..

எளிதாக வேலை தேட 'ப்ராஜெக்ட் சங்கம்'-அறிவித்தது மைக்ரோசாஃப்ட்.!

ப்ரொஜெக்ட் சங்கம்:

மைக்ரோசாப்ட்டின் இந்த ப்ரொஜெக்ட் சங்கம் என்பது வேலைதேடுவோர் தமது ஆதார் எண்ணைக்கொண்டு லிங்க்டுஇன் இணையதளத்தில் தமக்கான கணக்கினை துவக்க வேண்டும்.மேலும் அதில் தமக்கு விருப்பமுள்ள துறையினை தேர்ந்தெடுத்திட வேண்டும்.பிறகு லிங்க்டுஇன் வழியாக அத்துறை சார்ந்த பாடங்கள்,உள்ளிட்டவற்றை தரவிறக்கிக்கொள்ளலாம்.

எளிதாக வேலை தேட 'ப்ராஜெக்ட் சங்கம்'-அறிவித்தது மைக்ரோசாஃப்ட்.!

லிங்க்டுஇன் வழியாக:

இத்தகைய பயிற்சிகள் முடிந்த பிறகு லிங்க்டுஇன் வழியாக அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை தெரிந்துகொள்ளலாம்.மேலும் எஸ்எம்எஸ் வழியாகவும் இத்தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.ப்ரொஜெக்ட் சங்கம் ஆப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ப்ரொஜெக்ட் சங்கம் செயல் முறையானது ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து துவங்குகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

எளிதாக வேலை தேட 'ப்ராஜெக்ட் சங்கம்'-அறிவித்தது மைக்ரோசாஃப்ட்.!

ஸ்கைப் லைட் ஆப்:

மேலும் அந்த நிகழ்வில்,ஸ்கைப் வலைத்தளத்தின் லைட் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆப் குறைத்த திறனுள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தக்கூடிய வண்ணம் குறைத்த அளவில் 13 எம்பி அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும்,ஆதார் எண் வழியாக தகவல்கள் சரிபார்க்கப்படும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.இந்த செயலியின் வழியாக ஜாதகம்,விளையாட்டு உள்ளிட செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம்.போன் டயலர் வசதியும் இந்த செயலில் உள்ளது.

மேலும் படிக்க

கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.?

Read more about:
English summary
Microsoft launches ‘Project Sangam’ to make finding jobs easier.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot