புதிய சர்ஃபேஸ் வன்பொருளை அறிமுகப்படுத்தும் மைக்ரோசாப்ட்.!
மே7 2018ல் நடைபெறும் பில்ட் டெவலப்பர்கள் மாநாடு புதிய சர்ஃபேஸ் கருவிகளை அறிமுகப்படுத்தும் இடமாக இருக்கப்போகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய சார்ஃபேஸ் பொருட்கள் வெளியிடுவதை துரிதப்படுத்தியுள்ளது. நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, நிறுவனத்தின் இயக்குநர்கள் இது பற்றி கூறுகையில் இந்த வருடத்தின் இறுதியில் புதிய சர்ஃபேஸ் கருவிகளை வெளியிட திட்டமிடுவதாக கூறியுள்ளனர்.

மைக்ரோசாப்ட்-ன் சார்ஃபேஸ் தொழில் ஒவ்வொரு ஆண்டும் 32% வளர்ச்சி கண்டு வருகிறது மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட சர்ஃபேஸ் வன்பொருள் காரணமாக ,இந்த எண்ணிக்கை நிதியாண்டின் கடைசி காலாண்டிலும் , 2019ன் முதல் காலாண்டிலும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட பொருட்களை சர்ஃபேஸில் தொடர்ந்து அறிமுகப்படுத்தவுள்ளதால், அதிக வருவாய் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம் என்கிறார் மைக்ரோசாப்ட்டின் துணைத்தலைவர் மற்றும் தலைமை நிதிஅதிகாரியுமான ஏமி ஹுட். அவர் மேலும் கூறுகையில் புதிய சர்ஃபேஸ் புக் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டதாக கூறினார்.
ஆசார் பிராண்ட் கிளவுட் பிளாட்பார்ம், இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வருடாந்திர வளர்ச்சி 93% என்ற அதீத வளர்ச்சியடைந்து முதலிடத்தில் உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. அதற்கடுத்தபடியாக 65% வளர்ச்சியுடன் டைனமிக்ஸ்365ம், 42% வளர்ச்சியுடன் ஆபிஸ்365 கமர்சியலும் உள்ளன. அதே நேரம் லிங்கிடுஇன்-ம் 37% வளர்ச்சியடைந்துள்ளது. மைக்ரோசாப்டின் கேமிங் பிரிவின் ஆண்டு வளர்ச்சி 18%ம், எக்ஸ் பாக்ஸ் மென்பொருள் மற்றும் அதன் சேவைகள் 24 % வளர்ச்சி அடைந்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் , மைக்ரோசாப்ட் கிளவுட் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த காலாண்டு முடிவுகள் காட்டுகின்றன என்கிறார் நாதெள்ளா. முக்கிய பிரிவுகளான உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி மற்றும் தொழில் செயலிகள் போன்றவற்றில் புதுமையை புகுத்தவுள்ளனர்.
நிறுவனத்தின் அறிக்கை படி, லிங்கிடுஇன் 30% வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வளர்ச்சி 37% ஆக இருந்தது. ஆபிஸ்365ஐ பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 30.6 மில்லியன்களை கடந்து 12% வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளது.
மே7 2018ல் நடைபெறும் பில்ட் டெவலப்பர்கள் மாநாடு புதிய சர்ஃபேஸ் கருவிகளை அறிமுகப்படுத்தும் இடமாக இருக்கப்போகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்ஃபேஸ் ஸ்டுடியோ,சர்ஃபேஸ் லேப்டாப், சர்ஃபேஸ் புக் மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ வன்பொருளை மறுசீரமைக்கவுள்ளது. மேலும் சர்ஃபேஸ் போன் மற்றும் சர்ஃபேஸ் நோட்பேடை உருவாக்கிவருவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வன்பொருளை வெளியிடவுள்ளதாக , செயற்கை நுண்ணறிவு பிரிவின் துணைத்தலைவர் ஹாரி கூறியுள்ளார். இந்த புதிய படைப்பு செயற்கை நுண்ணறிவை அனைத்து மைக்ரோசாப்ட் கருவிகளிலும் புகுத்தும் குறிக்கோளின் ஒரு பகுதி. எனவே இந்த கருவிகள் மிக மிக ஆச்சர்யமூட்டுபவையாக இருக்கும் என்கிறார் ஹாரி.


Click it and Unblock the Notifications








