மைக்ரோசாப்ட்: விண்டோஸ் 10 இயங்குதளத்தில் தமிழ்-99 கீபோர்டு அறிமுகம்.!
பின்பு விண்டோஸ் 10 இயக்க முறையில் தமிழ் 99 கீபோர்டை இணைத்திருப்பது முக்கியமான நடவடிக்கை ஆகும் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வந்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது மாணவர்களுக்கும் பின்பு பல்வேறு மக்களுக்கு பயன்படும் விதமாக விண்டோஸ் 10 இயங்குதளத்தில் தமிழ் 99
கீபோர்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக மக்கள் தமிழ் எழுத்துகளை டைப் செய்வதற்கு உருவாக்கப்பட்ட தரமிக்க தமிழ் 99 கீபோர்டை தமிழக அரசு கடந்த 1999-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. பின்பு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பல்வேறு விண்டோஸ் இயக்க முறையில் (ஆப்ரேட்டிங்
சிஸ்ஸ்டம்) இந்த கீபோர்டு இயங்கி வருகிறது.

விண்டோஸ் 10:
தற்சமயம் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10-ல் அறிமுகம் செய்த 99 கீபோர்டு வசதியை இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்,தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழ் பயன்பாட்டாளர்கள் எளிமையா
பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை அதிகாரி படேல்:
மேலும் இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை அதிகாலி படேல் தெரிவித்தது என்னவென்றால் இந்திய மொழி தொழில்நுட்பங்களுக்கு இன்ஸ்கிரிப்ட் கீபோர்டு உள்பட அனைத்து தேசிய அளவிலான தரத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதியளிக்கிறது என்றார்.

முக்கியமான நடவடிக்கை :
பின்பு விண்டோஸ் 10 இயக்க முறையில் தமிழ் 99 கீபோர்டை இணைத்திருப்பது முக்கியமான நடவடிக்கை ஆகும் என்று தெரிவித்தார், பின்பு பல்வேறு மக்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று படேல் தெரிவித்தார்

ஹார்டுவேர்
குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த இந்த புதிய வழிமுறையை ஹார்டுவேர் மற்றும் தொடுதல் (டச் கீபோர்டு) என இரண்டு முறையில் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications