இப்பதான் தெரியுது ஏன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசைப்படுறாங்க? தரமான காரணங்கள்.!
கூகுள் நிறுவனத்தை போலவே தனித்திறமையை கொண்டது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம். மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேறப்பு உள்ளது.

அன்மையில் மைக்ரோசாப்ட் இந்தியா தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில்
அந்நிறுவனத்தை பற்றியும், பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன, அதைப் பற்றி விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உலகின் தலைசிறந்த தொலைநுட்ப நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம். அதன்படி Timesjob-ன் ஒரு அங்கமாக செயல்படும் ஒரு இணையதளம் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன ஊழியர்களிடம் நடத்தி முக்கிய ஆய்வில் மைக்ரோசாப்டில் மக்கள் எதனால் வேலை செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

வெளிவந்த ஆய்வறிக்கையின் தகவலின்படி மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவும், அதில் வேறுபல புதுமையை புகுத்தி, அதன்மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி வேலை செய்வதன் வழியே வேலை செய்வதற்கான தகுந்த சூழலை உருவாக்குவதாக கூறுகின்றனர்.

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சோதனைகளை மேற்கொள்ள உரிய கால அவகாசமும், குறிப்பிட்ட காலநேரத்தில் செய்து முடிக்காவிட்டாலும், ஊழியர்களுக்கு நெருக்கடி தராது, தட்டிக்கொடுத்து சுதந்திரமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவதாகவும் கூறுகின்றனர்.

இப்போது மைக்ரோசாப்டில் வேலை செய்பவர்கள் மைக்ரோசாப்ட்' என்ற பெயருக்காகவே வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்தில் ஒருவர் மேலதிகாரியாக இருந்தாலும் நேரடியாக அவரை தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான முழு சுதந்திரமும் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அனைத்து தரப்பு ஊழியர்களிடையே நட்புணர்வு மற்றும் ஒத்துழைப்பு நல்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது.

சுருக்கமாக மைக்ரோசாப்ட் தொழிலாளர்களை ஊக்குவிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பாக பார்த்து கொள்பவர்கள் என்ற எண்ணமும் அனைத்து ஊழியர்களிடையே இருப்பதாக தெரிவிக்கின்றனர். மைக்ரோசாப்டில் மற்ற நிறுவனங்களில் ஒரு வேலைக்கு தரும் ஊதியத்துக்கு நிகராக அல்லது அதைவிட அதிகமாக தான் ஊதியம் தருகிறார்கள். மேலும் ஊழியர்களின்
உடல்நலம் குறித்து கருத்தில் கொண்டு சிறந்த பயிற்சிகளை வழங்குகின்றனர்.

மேலும் இந்த நேரத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று அவர்கள் நேரத்தை வரையறுப்பதில்லை மற்றும் தினசரி அலுவலகத்திற்கு வந்த வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதுமில்லை. பின்பு ஒரு ஊழியர் தன் மேற்படிப்பு, தொழில் சார்ந்து பயிற்சிகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்கின்றன.

குறிப்பாக மைக்ரோசாப்டில் வேலை புரியும் ஒருவருக்கு அந்த துறையில் வேலை இல்லையென்றால் இன்னொரு துறையில் பயிற்சி கொடுத்து அந்த துறையில் பணி அமர்த்துவார்கள். இப்படி செய்வதால் பணி செய்யும் வரை புதிதாக கற்றுக்கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற கருத்துக்கள் மூலம் மைக்ரோசாப்டில் பணிபுரியும் ஊழியர்களின் மன நிலையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்
ஊழியர்களுக்கு கொடுக்கும் சலுகைகள் தான் அங்கே பணிபுரிய விருப்பப்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








