மாற்றுத்திறனாளிகள் மனம்குளிர வைத்த மைக்ரோசாப்ட்: எப்படி?

கன்ட்ரோல்களை எனது உடலிலோ அல்லது விருப்பப்பட்ட இடத்திலோ பொறுத்தவும், தேவைப்படும் போது மாற்றிக்கொள்ளவும் முடியும்.

|

மாற்றுத்திறனாளிகளுக்கான எக்ஸ்பாக்ஸ் அடாப்டிவ் கன்ட்ரோல்களை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். இந்த கருவியின் சிறப்பம்சங்கள் கடந்த வார தொடக்கத்தில் வெளியானது. இந்த கன்ட்ரோலரில் 2 பெரிய ப்ரோகிராமபெல் பட்டன்கள் மற்றும் 19 ஜேக்கள் உள்ளன. இவற்றின் மூலம் பல்வேறு விதமான ஜாய் ஸ்டிக்ஸ், சுவிட்சுகள், பட்டன்களை எளிதில் இணைக்கலாம் என்பதால், அனைத்து வித பயனர்களும் கேம்கள் விளையாடமுடியும்.

மாற்றுத்திறனாளிகள் மனம்குளிர வைத்த மைக்ரோசாப்ட்: எப்படி?

"எனக்கு எப்படி விருப்பமோ அதற்கேற்றவாறு எக்ஸ்பாக்ஸ் அடாப்டிவ் கன்டிரோலரை என்னால் மாற்றிக்கொள்ள முடியும்' என்கிறார் மைக்ரோசாப்ட் ஸ்டோரின் மாற்றுத்திறனாளி ஊழியர் சாலமன் ரோம்னே. " எனது கால்களை மட்டுமே பயன்படுத்தி என்னால் கேமை முழுவதும் விளையாட முடியும்.

கன்ட்ரோல்களை எனது உடலிலோ அல்லது விருப்பப்பட்ட இடத்திலோ பொறுத்தவும், தேவைப்படும் போது மாற்றிக்கொள்ளவும் முடியும். இந்த கருவியை பயன்படுத்தி எளிதில் இணைப்புகளை ஏற்படுத்தி, கேமை விளையாடமுடியும்.இது சாதாரண விசயமல்ல" என மேலும் கூறினார்.

இதில் முக்கிய அம்சமே இணைப்புத்திறன் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது தான். எனவே பயனர்கள் தங்களின் தேவைக்கேற்ப இதை கட்டமைத்துக்கொள்ளலாம். ஆனாலும் பல கேம்களுக்கு இதை ஒருங்கிணைந்த தீர்வாக பார்க்க முடியாது. ஆனாலும் இந்த எக்ஸ்பாக்ஸ் கருவிகள் மூலம் வழங்கப்பட்ட வசதிகளை அளவில்லாதது. 99.99 டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்ட இது, இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவாண்டா கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை உருவாக்கிவருவதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. அதைப் பற்றிய சில தொழில்நுட்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரில் " இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்" என்னும் IOT தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

இந்த ஸ்பீக்கரில் க்குவால்காம்ஸ் ஸ்னாப்டிராகன் 212Soc என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் ப்ராஸ்சஸ்சர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் நான்கு ARM Cortex-A7 கோர் 1.3GHz மற்றும் Adreno 304 GPUம் உள்ளது. பெரும்பாலும் சர்வரில் உள்ள வன்பொருட்கள் பயன்படுவதால் குறைந்த செயல்திறன் உள்ள சிப்செட் பயன்படுத்தப்படுகிறது. அமேசான் அலெக்ஸாவிற்கு இது போட்டியாக இருக்கும். ஆனால் இந்த ஸ்பீக்கர் இன்னமும் வடிவமைப்பு கட்டத்தில் இருப்பதால், உயர்தர ஸ்மார்ட் ஸ்பீக்கரை பார்க்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Microsoft has a heartwarming offering for the differently abled ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X