இது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்!

|

உலக பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸிடம் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறிய பதில் குறித்த பார்க்கலாம்.

ஒரு ஆண்டுக்கு முன்பே கணிப்பு

ஒரு ஆண்டுக்கு முன்பே கணிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு ஆண்டுக்கு முன்பே வைரஸ் பெயரை குறிப்பிடாமல் தற்போது நடக்கும் விளைவு குறித்து பேசியிருந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் கடந்த ஆண்டு மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் இந்த உலகம் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது.

தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும்

தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும்

அந்த வைரசால் முதல் 6 மாதத்தில் கோடிக்கணக்கானோர் இறக்க கூடும். அந்த வைரசால் உலகப் போர் ஏற்பட வாய்ப்பிருக்கும் என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு, அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். பில்கேட்ஸ் கணிப்பு, இந்த கொரோனா குறித்த என்பது துல்லியமாக தெரியவில்லை என்றாலும், கொரோனா தாக்கம் அவர் வார்த்தைக்கு ஏற்ப பரவியது.

வீடியோ கான்பரன்ஷ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு

வீடியோ கான்பரன்ஷ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்த நிலையில் கடந்த ஜூலை மாத இடையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வீடியோ கான்பரன்ஷ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் இந்தியாவில் பல பிரதான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன எனவும் இந்திய மருந்தியல் துறையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான உதவிகள் சிறப்பாக செய்து வருகின்றன எனவும் கூறினார்.

2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை!2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை!

இந்தியா மருந்தியல் துறைக்கு பல்வேறு திறமைகள்

இந்தியா மருந்தியல் துறைக்கு பல்வேறு திறமைகள்

இந்தியா மருந்தியல் துறைக்கு பல்வேறு திறமைகள் உள்ளன. இந்திய மருந்தியல் துறை இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என தான் எதிர்பார்ப்பதாக பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா பல்வேறு நோய்க்கு மருந்துகள் கண்டுபிடித்துள்ளன எனவும் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும்

கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும்

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பில்கேட்ஸிடம் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் எனவும் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான செயல்பாடு சிகிச்சை முறை மூலம் அடுத்த ஆண்டுக்குள் முழுவதுமாக வெளிவருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

சிறந்த தடுப்பூசி மருந்துக்கு காலஅவகாசம் ஆகலாம்

சிறந்த தடுப்பூசி மருந்துக்கு காலஅவகாசம் ஆகலாம்

இருப்பினும் தடுப்பூசி மருந்து செயல்திறன் ஆரம்பக்கட்ட நோய் பரவலுக்கு மட்டுமே இருக்கும் நீண்ட கால பாதிப்புக்கு இருக்காது எனவும் அதற்கான சிறந்த தடுப்பூசி மருந்தை உருவாக்க கால அவகாசம் ஆகலாம் எனவும் கூறினார். படிப்படியாக சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றம் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி

நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி

உலகின் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போன்றவைகள் நம்மை 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தாக்கத்தில் இருந்து வெளிக் கொண்டுவரும் என கேட்ஸ் கூறினார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Microsoft Founder Bill Gates Answer about when Covid19 Will End

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X