கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

|

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மடிக்கக்கூடிய தொலைபேசியை பயன்படுத்துகிறார். ஆனால் அது மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டியோ சாதனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் Reddit Ask Me Anything என்ற அமர்வில், கேட்ஸ் தான் சாம்சஹ் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனத்தை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.

மடிக்கக்கூடிய தொலைபேசி

மடிக்கக்கூடிய தொலைபேசி

இந்த நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் ஒரு மடிக்கக்கூடிய தொலைபேசியை பயன்படுத்துவதாக கூறினார். ஆனால் அது மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பில்கேட்ஸ், தான் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனத்தை பயன்படுத்துவதாக கூறினார். சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனமானது மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டுயோ சாதனத்தை விட குறிப்பிடத்தக்க அம்சத்தை கொண்டிருக்கிறது.

பில்கேட்ஸ் எந்த போனை பயன்படுத்துகிறா

பில்கேட்ஸ் எந்த போனை பயன்படுத்துகிறா

பில்கேட்ஸ் எந்த போனை பயன்படுத்துகிறார் என்ற எப்போதாவது சிந்தித்தது உண்டா., பொதுவாக விலை உயர்ந்த போன் என்றால் நினைவுக்கு வருவது ஐபோன்தான். பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் என்றால் ஐபோன் தான் வைத்திருப்பார்கள் என்ற யூகம் அனைவரிடமும் இருக்கும். ஆனால் உலகளவில் நான்காவது பணக்காரராக இருக்கும் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் ஐபோன் அல்ல. அவர் ஒரு மடிக்கக்கூடிய தொலைபேசியை பயன்படுத்துகிறார். அது மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டியோ சாதனமும் இல்லை.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டியோ சாதனம் அல்ல

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டியோ சாதனம் அல்ல

காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ் என்று குறிப்பிட்டதும் அவர் ஆப்பிள் நிறுவனர் எனவே அவர் பயன்படுத்துவது ஆப்பிள் ஐபோனாக தான் இருக்க முடியும் என யூகிப்போம். அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் என்று குறிப்பிட்டதும் அவர் பயன்படுத்தும் போன் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாதனமாக தான் இருக்க முடியும் என கணிப்போம். அதேபோல் மடிக்கக்கூடிய போன் என்று குறிப்பிட்டதும் அது மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டியோ சாதனமாக தான் இருக்க முடியும் என நினைப்போம். ஆனால் பில்கேட்ஸ் அந்த சாதனத்தை பயன்படுத்தவில்லை. பில்கேட்ஸ் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சாதனத்தை பயன்படுத்துகிறார்.

சாம்சங் சாதனத்தை பயன்படுத்துவதற்கு காரணம்

சாம்சங் சாதனத்தை பயன்படுத்துவதற்கு காரணம்

9to5Google அறிக்கையின் படி, இந்த வாரம் Reddit Ask Me Anything அமர்வில் பங்கேற்ற பில்கேட்ஸ், தான் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் சாதனத்தை பயன்படுத்துவதாக பதிலளித்தார். இந்த டிஸ்ப்ளேவில் நான் சிறந்த போர்ட்டபிள் பிசி மற்றும் போன் அனுபவத்தை பெற முடியும், வேறு எந்த காரணமும் இல்லை என பில்கேட்ஸ் கூறினார். மைக்ரோசாஃப்ட் உடனான சாம்சங்கின் இணக்கமான கூட்டமாண்மை காரணமாக விண்டோஸ் உடன் ஒருங்கிணைப்பட்டதால் அவர் சாம்சங் சாதனத்தை பயன்படுத்துவதற்கு காரணமாகும். முன்னதாக பில்கேட்ஸ் ஐபோன்களை பயன்படுத்துவதாகும் இருப்பினும் எப்போதும் தம்முடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அப்போது பில்கேட்ஸ் சாதனத்தின் பெயரை வெளிப்படுத்தவில்லை. முதன்முறையாக இப்போது தான் சாதனத்தை அதன் பெயருடன் குறிப்பிட்டு அதை பயன்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஃபோல்ட் இசட் 3 சாதனமானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.1,49,999 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.1,57,999 ஆக இருக்கிறது. இரண்டு மாடல்களும் பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் க்ரீன் வண்ண விருப்பத்தில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், கேலக்ஸி இசட் ஃபோல் 3 சாதனமானது 6.2 இன்ச் எச்டி ப்ளஸ் அமோலெட் 2எக்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. திறக்கப்படும் போது இதன் காட்சி 7.6 இன்ச் அளவை கொண்டிருக்கிறது. இது 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் புதுப்பிப்பு ரேட்டிங்கை கொண்டுள்ளது.

மல்டி ஆக்டிவ் விண்டோ மற்றும் புதிய டாஸ்க்பார் அம்சம்

மல்டி ஆக்டிவ் விண்டோ மற்றும் புதிய டாஸ்க்பார் அம்சம்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனானது 5என்எம் 64 பிட் ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 மேம்பாட்டு ஆதரவைக் கொண்டுள்ளது. மல்டி ஆக்டிவ் விண்டோ மற்றும் புதிய டாஸ்க்பார் அம்சத்தைக் கொண்டுள்ளது. அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் டெலிபோட்டோ ஷாட்கள் என மூன்று கேமரா அம்சங்கள் இருக்கிறது. முன்பக்கத்தில் இரண்டு அண்டர் டிஸ்ப்ளே, ஒன்று கவர் டிஸ்ப்ளே மற்றொன்று டிஸ்ப்ளே உள்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

எஸ் பென் ஆதரவு

எஸ் பென் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 இரண்டு அமோலெட் காட்சிகளை கொண்டுள்ளது. இதன் வெளிப்புறம் 6.2 இன்ச் மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளே 7.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இருக்கிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி உள்ளது. புகைப்படங்களை பதிவு செய்ய 12 எம்பி பின்புற கேமரா அமைப்பும், வெளிப்புற காட்சியில் 10 லென்ஸ் மற்றும் டிஸ்ப்ளே ஷூட்டர் கூழ் 4 எம்பி கேமரா உள்ளது. எஸ் பென் ஆதரவும் இதில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Microsoft Founder and billionaire Bill Gates Using this Phone only: Nor Iphone and Nor Microsoft Surface Duo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X